விமர்சனம்……

அதிசய உலகம்

next........

மேலும்..

ஊரு சனம் தூங்கிருக்கும்
ஒண்டும் செய்யா சும்மாரிக்கும்
யாரும் ஒராள் சேவை செய்தால்
மாறி மாறி விமர்சிக்கும்

எந்தன் சமூகம் இது
ஏதும் செய்வோம் என்று
ஏதோ சேவை செய்ய வந்தால்
அந்த ஆளு செய்யும்
ஆக்கப் பணிகளுக்கு
ஆட்கள் கூடி விமர்சிப்பார்.
அசிங்கமாவும் போஸ்ற் இடுவார்.

தானும் செய்ய மாட்டார்
வீணாய் கதை சொல்வார்
நானாமாரு பலர்க்கு
ஏனோ இந்தப் பழக்கம்
ஏனோ இந்தப் பழக்கம்

குத்தம் சொல்வார்
குறை சொல்வார்
இத்தனை ரூபாய் ஊழல் என்பார்.
அத்தனையும் சொல்லிப் போட்டு
அந்த சேவை அனுபவிப்பார்.

யாரும் ஊழல் செய்தால்
ஏதும் தவறு செய்தால்
எதிர்ப்போம் அதனைத் தப்பில்லை.
ஆனால் எதிர்ப்பவர்கள்
அதனை விடச் சிறப்பாய்
அதிக சேவை செய்ய வேண்டும்.
அதனால் நன்மை வர வேண்டும்.

பழி மட்டும் சொல்லி
வழி சொல்லாப் பேச்சால்
பயன் ஏதும் உண்டா?
பகை மட்டும் மிஞ்சும்.
பகை மட்டும் மிஞ்சும்

சும்மா சும்மா எதிர்ப்பதாலே
சுகம் யார்க்கும் கிடைப்பதில்லை.
சேர்ந்து நின்று சேவை செய்தால்
ஊரு நன்றாய் முன்னேறும்

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்