மெத்தியூஸ் மீண்டும் அணித்தலைமை ஏற்கிறார்!

அதிசய உலகம்

super dance semba.

மேலும்..

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான இலங்கை அணித்தலைவராக மீண்டும் ஏஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்படவுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுடனான  முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டி இலங்கை அணி விபரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஏஞ்சலோ மெத்தியூஸ் அணித்தலைவர் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்வுக் குழுவினரை சந்திக்கும் மெத்தியூஸ் அதனைத் தொடர்ந்து ஊடக சந்திப்பையும் நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு அணித்தலைமையை ஏற்றுக் கொண்ட மெத்தியூஸ் தலைமையில் 98 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி அவற்றில் 47 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதேவேளை அணித்தலைவராக ஒருநாள் போட்டிகளில் 2949 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் சிம்பாப்வே அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கட் தொடரில் இலங்கை அணி படுதோல்வியடைந்த நிலையில் அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளுக்குமான அணித்தலைவர் பதவியிலிருந்து மெத்தியூஸ் விலகியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்