பிரித்தானிய அமைச்சரவையில் அமைச்சு பதவி வகிக்கும் இரு இந்தியர்கள்

அதிசய உலகம்

OMG....!!!

மேலும்..

பிரித்தானிய அமைச்சரவையில் அமைச்சு பதவி வகிக்கும் இரு இந்தியர்கள்

பிரித்தானியாவின் அமைச்சரவையை அந்நாட்டு பிரதமர் தெரசா மே மாற்றியமைக்கவுள்ளார்.

இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இருவருக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் பிறந்த ரிஷி சுனக் 37 என்பவர் ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனும் ஆவர்.

அத்துடன், இவர் ரிச்மான்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு வீட்டு வசதித்துறை, உள்ளாட்சித்துறை வழங்கப்பட்டு உள்ளது.

பிரித்தானியாவில் பிறந்த சுயல்லா பெர்னாண்டசு (37 கோவாவை பூர்வீகமாக கொண்டவர்.

பார்கிஹாம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக நடந்த பொதுவாக்கெடுப்பின் போதும் அதற்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்