பல்கலைக்கழக விண்ணப்பப்படிவங்கள் நிரப்புதல் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு…

அதிசய உலகம்

OMG....!!!

மேலும்..

களுவாஞ்சிக்குடி சமுக கல்வி அபிவிருத்திப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2017ம் ஆண்டு வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுக்கமைய 2017ஃ2018 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதற்குத் தகுதியான அனைத்துத் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பல்கலைக்கழக விண்ணப்பப் படிவங்களை நிரப்புவது தொடர்பாகவும், விண்ணப்பிக்கக் கூடிய கற்கை நெறிகள் தொடர்பாகவும் தெளிவூட்டும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்றைய தினம் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் டிலோஜன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கருத்தரங்கிற்கு வளவாளர்களாக களுதாவளை மகா வித்தியாலய அதிபர் கார்த்தீபன், குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் சத்தியமோகன், ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பிரதேசத்தில் 2017ம் ஆண்டு க.பொ.த பெறுபேறு பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக தகுதிபெற்ற மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பப் படிவங்களை எவ்வாறு பூரணப்படுத்துவது, மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய கற்கைநெறிகள் மற்றும் இணையத்தளங்களினூடாக எவ்வாறு விணப்பங்களை மேற்கொள்வது போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டதுடன், செயன்முறை விளக்கங்களும் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்