வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

அதிசய உலகம்

super dance semba.

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

வவுனியா புகையிரத நிலைய வீதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக குருமன்காடு நோக்கிச் சென்ற கார் ஓன்று வீதியோரத்தில் குவிக்கப்பட்டு இருந்த கற்களுடன் மோதி விபத்துக்குள்ளாகி தடம் புரண்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்த நிலையில், இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

ஐந்து பேர் பயணம் செய்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களை தவிர ஏனைய இருவரையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்