கனடாச் செய்திகள்

கனடா இந்திய கூட்டு தயாரிப்பாக “ நேத்திரா” என்னும் திரைப்பட இசைத்தட்டு வெளியீட்டு விழா(photo/video)

கனடா இந்திய கூட்டு தயாரிப்பாக “ நேத்திரா” என்னும் திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கின்றது. இப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 2ம் திகதி 50 Hallcrown pl, Armenian Youth Centre, Canada இல் SWETHA CINE ...

மேலும்..

தமிழ்க் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடா

ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் ...

மேலும்..

கண்ணுக்குள் பச்சை குத்திய அழகி: பார்வை பறிபோகும் அபாயம்

கண்ணுக்குள் பச்சை குத்தியதால், கனடாவை சேர்ந்த மாடல் அழகியின் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த மாடல் அழகி கேட் கேளிங்கர். இவர் தனது உடல் அமைப்பை மாற்றி அமைப்பதில் ஆர்வம் உடையவர். உடலின் பல உறுப்புகளில் மாற்றம் செய்து தனது புகைப்படத்தை ...

மேலும்..

மர்மான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட இளம் வயது பெண்

மர்மான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட இளம் வயது பெண் டொரண்டோவில் காணாமல் போன 22 வயது பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. Tess Richey(22) என்ற இளம்வயது பெண்மணி காணாமல் போயுள்ள நிலையில், வருகிற புதன்கிழமை ...

மேலும்..

கனடாவில் தொழில் புரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கனடா – ஒன்ராறியோவில் மணித்தியாலயத்திற்கான அடிப்படை ஊதியத்தினை 15 டொலர்களாக அதிகரிக்க தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பிலான சட்டத்திருத்தம் ஒன்று ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதுவரையிலும் மணித்தியாலயத்தின் அடிப்படை ஊதியமாக 11.60 டொலர்களே காணப்பட்டு வந்துள்ளது. இதனை எதிர்வரும் ஜனவரி ...

மேலும்..

எமது நாட்டில் பனை வளத்தில் இருந்து  தயாரிக்கப்படும் கைப்பணி பொருட்களை மேலைத்தேய நாடுகளுக்கு சந்தைப்படுத்தும் நோக்கில் உடன்படிக்கை…

எமது நாட்டில் பனை வளத்தில் இருந்து  தயாரிக்கப்படும் கைப்பணி பொருட்களை மேலைத்தேய நாடுகளுக்கு சந்தைப்படுத்தும் நோக்கில்  கனடா மற்றும் வட அமெரிக்காவுக்கான உத்தியோக பூர்வ சந்தைப்படுத்தும் உரிமையை கைச்சாத்திடுவது தொடர்பில்  இலங்கை பனை அபிவிருத்தி சபையும் , கனேடிய நிறுவனமான “ ...

மேலும்..

கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிக்கு மறுவாழ்வு அளித்த ரோரென்ரோ மாநகர பொலிஸ்.

கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி ஒருவருக்கு தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்து, அவருக்கு மறுவாழ்வு அளித்த ரோரென்ரோ மாநகர பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஙகை அரசு சார்பான கௌரவம் ரொரென்ரோ   பெரும்பாக பொலிஸ் தலைமை அலுவலகத்தில்  அளிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ரொரன்ரோ நகரில் ...

மேலும்..

குடியுரிமையை வாரி வழங்கும் கனடா அரசு: 10லட்சம் பேருக்கு குடியுரிமை!

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமையினை வாரி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, போன்ற நாடுகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை பின்தள்ளியுள்ள நிலையில். கனடா அரசு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதோடு அடுத்த மூன்று ...

மேலும்..

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி!

கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர். இவர்களின் நாடு கடத்தலை ...

மேலும்..

ஆறாத வடுவோடு காத்திருக்கும் தமிழர்களை ஏளனம் செய்தது போல இலங்கையின் ராணுவ அதிகாரிகள் கனடாவில் 

ஆறாத வடுவோடு காத்திருக்கும் தமிழர்களை ஏளனம் செய்தது போல இலங்கையின் ராணுவ அதிகாரிகள் கனடாவில்  ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் பிரதம மந்திரி, ஒரு சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு முக்கியமான ஒரு விசயத்தில் தன்னால் ஆன உறுதியான முயற்சிகளை எடுப்பதாக கூறினாரே என்றால் அதுவும், முதன்முறை பிரதம மந்திரியாக பதவியேற்று பாதி வழியில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், என்றால் அதை வெறும் அரசியல் நோக்கில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், பிரதமர் ஜஸ்டின்Trudeau கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடை பெற்ற 'தமிழ் தெரு விழா வில் முழங்கிய பேச்செல்லாம் வெறும் தேர்தல் பிரச்சாரம் போலவே தோன்றுகிறது.   தேர்தலுக்கு முன்பாக தமிழ் சமுதாயத்திற்குக்கான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வேன் எனவும் உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் நடந்த போர் குற்றங்களின் மேல் நடவடிக்கைகள் எடுப்பேன் என்றும் நீதி மற்றும்சமரசத்தை காக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்வேன் என்றும் நமக்கு வாக்குறுதிகளை வழங்கினார். இப்பொழுது கேட்டாலும் நம்பிக்கை தரும் வகையில் வாக்குறுதி தருவார். ஆனால் இதுவரை  தமிழர் விவகாரத்தில் எந்த வித பாரிய நகர்வையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அன்று தொட்டு இன்று வரை தமிழர்களுக்கு வாக்குறுதிகளை மட்டும் வழங்கும் லிபெரல் கட்சி தமிழர்கள் மேல்ஒரு அபார நம்பிக்கை வைத்திருக்கிறது. அதாவது, எது எப்படி இருந்தாலும் தமிழர்கள் வாக்குகள் லிபெரல் கட்சிக்குத்தான் என்ற ஒரு திடமான நம்பிக்கை. இலங்கையை விட்டு வெளியேறிய பெரும்பாலான தமிழ் மக்கள் கனடாவில் குடியேறி இந்நாட்டை தங்கள் இரண்டாம் தாயகமாக கருதத் தொடங்கிவிட்டனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக இங்கிருக்கும் தமிழர்கள்அரசியல் உள்பட தடம் பதிக்காத களமே இல்லை என உறுதியாகக் கூறலாம். இன்று கனடாவில் உள்ள இதர மக்கள் போலவே தமிழர்களும் அதன் வளர்ச்சிக்கும் வளமைக்கும் உறுதுணையாக இருக்கின்றனர்.   அவர்கள் தாயகத்தை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும் இன்னமும் அவர்களின் கடந்த கால துயரங்களையும் அங்கு நடந்த தொடர் நிகழ்வுகளையும் அவர்கள் மறக்க வில்லை. இன்றளவும் அவர்கள் நீதிக்காகஏங்குகின்றனர். அப்பாவியான குற்றமற்ற ஆண், பெண் மற்றும்  குழந்தைகள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்னும் பெயரிலே கொல்லப்பட்டதை எதிர்த்து நீதிக்காக காத்துஇருக்கின்றனர். இன்னும் காணாமல் போனஏரளாமான ஆண், பெண், குழந்தைகளை அல்லது இலங்கை தேசியப் படையினரின் உதவியோடு அல்லது அவர்களாலேயே கடத்தி மற்றும் கற்பழிக்கப்பட்ட பலரை பற்றியும் அறிய காத்திருக்கின்றனர். ஆறாத வடுவோடு காத்திருக்கும் தமிழர்களை ஏளனம் செய்தது போல இந்த லிபெரல் அரசாங்கம் இலங்கையின் ராணுவ அதிகாரிகள் உட்பட்ட குழு ஒன்றை கனடாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்க அனுமதி வழங்கிஉள்ளது. இவ்வாண்டில் நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் கனடா நாட்டின் வான்கூவரில் நடந்த ஐ.நா சபைக்கான அமைதி காக்கும் அமைச்சக மாநாட்டில், 2009ம் ஆண்டு போர் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரானகுற்றங்களில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் பாதுகாப்புடன் கலந்து கொண்டனர். கனடாவில் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியான கன்செர்வேட்டிவ் கட்சி போர்க்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தை கனடாவுக்குள் அனுமதித்ததை பற்றி ஒரு முறையல்ல நான்கு முறை குரல் உயர்த்தியது.ஆனால் அவர்களின் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியான லிபரல் கட்சியிடம் விடை ஏதுமில்லை. இவ்வரசாங்கத்தை நடத்தும் லிபரல் கட்சியினருக்கு இலங்கை விவகாரங்கள்  பற்றி அக்கறை ஏதும் உள்ளதாகதெரியவில்லை. ஸ்டீபன்கார்பரின் தலைமையில் முன்பு இயங்கிய அரசு, இலங்கை விவகாரங்கள் பற்றிய நடவடிக்கைகளில் தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் இயங்கியது. அப்போதிருந்த வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜான்பெயர்டு இலங்கை மனித உரிமைகள் தொடர்பான அனைத்து சூழ்நிலைகளையும் தெளிவாக கையாண்டார். கார்பர் அரசாங்கம் தமிழ் மக்களிடம், “ நாங்கள் இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்போம் “, என்று தேர்தல் கால வாக்குறுதி எதுவும் தரவில்லை. ஆனால் அவ்வாறு செயலாற்ற துணிந்தது. தமிழர்களுக்குநிகழ்த்தப்பட்ட அநீதிக்கு எதிராக  உலக மேடையில் உரக்க பேசியது. இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தம் கொடுத்தது. போர் குற்றங்களோ மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களோ இழைத்தவர்களையும்  இழைத்ததாக சந்தேகிக்கப்படுபவர்களையும்  கனடாவுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப முடியும் என்ற ஒரு சட்ட மூலம் சிலஆண்டுகளுக்கு முன்னரே நிறைவேற்ற பட்டு அமுலில் இருக்கிறது. மக்னிட்ஸ்கீ ஆக்ட் எனப்படும் இந்த சட்டத்தை உபயோகித்து வரவிருந்த இலங்கை அதிகாரிகளை நிறுத்துமாறு கன்சர்வேட்டிவ் கட்சியின்வெளியுறவுத்துறைக்கான இணை விமர்சகர் கார்நெட் ஜெனுஸ் பலமுறை பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தபோதும், லிபெரல் அரசாங்கம் அதனை செவிமடுக்கவில்லை. கர்னேட் ஜெநஸ் கூறிய ஒரு விடையம் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட இலங்கை ராணுவ அதிகாரிகள் கொண்ட குழு கனடா வருவதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு கட்டுரை ஒன்றை Scarborough Rouge-Park தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர், தமிழர், கேரி ஆனந்தசங்கரி டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார். தங்களுடைய லிபெரல் அரசில் இருக்க கூடிய ஒரே தமிழர், சட்ட வல்லுநர், கேரியின்கோரிக்கையை கூட ஏற்றுக்கொள்ளவில்லை இந்த அரசு என்று கார்னெட் தனது பாராளுமன்ற விவாதத்தின் பொது குறிப்பிட்டிருந்தார். காரணம்? லிபெரல் அரசிடம் தமிழர் பிரச்னை சார்ந்த எந்த ஒரு செயல் திட்டமும் இல்லை. அக்கறையும் இல்லை. தமிழரை விடுங்கள்... மனித உரிமை என்பது கூட பேச்சளவில் உபயோகித்தும் ஒரு அரசியல்  சாதனம்போலவே இந்த அரசுக்கு தென்படுகின்றது! இணைக்கப் பட்டிருக்கும் காணொளியிலே எதிர் கட்சியான கான்செர்வ்டிவ்சின் துணை நிழல் அமைச்சர் கர்னேட்ட் ஜெநஸ் எழுப்பும் கேள்விகளுக்கு கனடிய அரசாங்கத்தின் வெளிவிகார அமைச்சரின் பாராளுமன்ற செயலர்தரும் பதில்களை கேளுங்கள். இந்த விவாதம் இறுதியாக நடைபெற்றது.இதற்கு முன்னர் பல தடவைகள் இதே விடையம் சம்மந்தமான கேள்விகள் பலமுறை எழுப்ப பட்டன. இருப்பினும், விடைகள் இவ்வாறே இருக்கின்றனஎன்றல், அதன் அர்த்தம் என்ன என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

மேலும்..

கனடிய நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையில் அதிக ஈடுபாடு காட்டுவேன் என உறுதி.

கனடிய நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையில் அதிக ஈடுபாடு காட்டுவேன் என உறுதி. கனடிய நாட்டின் எதிர்க்கட்சித்தலைவரும் பழமைவாதக்கட்சியின் தலைவருமான மதிப்புக்குரிய அன்ரூ சியர் கடந்த வாரம் மிசிசாக நகரில் தமிழ் மக்களை முக்கியமாக தனது கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் இரவு ...

மேலும்..

இலங்கை அரசுக்கு கனடாவின் அழுத்தம் அவசியம்!

இலங்கை அரசுக்கு கனடாவின் அழுத்தம் அவசியம்! - அந்நாட்டுத் தூதுவரிடம் நேரில் வலியுறுத்தினார் யாழ். ஆயர் (photo)  "காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு  கனடா அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்" - இவ்வாறு தன்னை நேற்றுச் சந்தித்த இலங்கைக்கான புதிய கனேடியத் தூதுவரிடம் வலியுறுத்தினார் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ...

மேலும்..

கனடிய நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையில் அதிக ஈடுபாடு காட்டுவேன் என உறுதி. 

கனடிய நாட்டின் எதிர்க்கட்சித்தலைவரும் பழமைவாதக்கட்சியின் தலைவருமான மதிப்புக்குரிய அன்ரூ சியர் கடந்த வாரம் மிசிசாக நகரில் தமிழ் மக்களை முக்கியமாக தனது கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் இரவு பகலாக உழைத்து தன்னை வெல்ல வைத்த கட்சியின் தன்னார்வத் தொண்டர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அத்துடன் கடந்த ...

மேலும்..

ஆங்கிலத்தில் புதிய வார்த்தையை உருவாக்கி சாதனை படைத்த 6 வயது சிறுவன்

கனடாவைச் சேர்ந்த லெவி என்னும் சிறுவன், ஆங்கிலத்தில் புதிய வார்த்தையை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளான். ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளை திருப்பி எழுதும் போது வேறு வார்த்தை உருவானால், அதனை குறிப்பிட்டு சொல்வதற்கு வார்த்தை இல்லை. அதனைக் குறிப்பிடுவதற்கு ‘லெவிடிரோம்’ என்ற புதிய வார்த்தையை லெவி ...

மேலும்..

நேத்ரா” (AUDIO LAUNCH) பாடல்கள் வெளியீடு கனடாவில்

நேத்ரா" (AUDIO LAUNCH) பாடல்கள் வெளியீடு கனடாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி ஸகாபுறோ ஆர்மேனியன் மண்டபத்தில் இலவச நிகழ்வாக நடைபெறவுள்ளது. நேத்ரா திரைப்படத்தின் இயக்குனர் ஏ. வெங்கடேஸ் மற்றும் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா மற்றும் கதாநாயகன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். ...

மேலும்..