கனடாச் செய்திகள்

கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நான்கு ஈழ தமிழர்கள் விடுதலை

கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த வடக்கைச் சேர்ந்த நான்கு தமிழர்கள் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமல்ராஜ் அந்தசாமி, ஜெயசந்திரன் கனகராஜ், பிரான்சிஸ் அந்தோனிமுத்து, விக்னராஜா தேவராசா ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2009 ஆம் ...

மேலும்..

கியூபெக்கின் ஊடாக கனடாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிரிப்பு

சட்டவிரோதமான முறையில் எல்லைகளைக் கடக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள், அதிகமாக கியூபெக்கின் ஊடாகவே கனடாவுக்குள் நுழைவதாக தெரியவந்துள்ளது. கனேடிய மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் மாத்தில் மனிட்டோபாவை விடவும் கியூபெக்கின் ஊடாக அதிக புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக ...

மேலும்..

“ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்”

Lyca TV மற்றும் Matrix Legal Services Deepan வழங்கும் “ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்” பாடும் நிலா SPB அவர்கள் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி July 29, 30 இரண்டு நாட்கள் Markhamல் நடைபெறவுள்ளது. மேலும் தமிழ் மக்களை கவர்ந்த “மாப்பிள்ளை” ...

மேலும்..

புதைகுழி ஏற்படும் அபாயம்: ரொறன்ரோவில் போக்குவரத்து தடை

ஒன்ராறியோவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் பேவிவ் அவெனிவ் மற்றும் யோர்க் மில்ஸ் வீதி ஆகியவற்றை இணைக்கும் பகுதியில் பிரதான நீர்க்குழாய் வெடித்ததில் குறித்த பகுதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து அந்த வீதி பகுதியளவில் மூடப்பட்டுள்ளது. இதனால் புதைகுழி ஏற்படக்கூடிய அபாயம் ...

மேலும்..

கனடாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் துரிதமாக இருக்கும்: சர்வதேச நாணய நிதியம்

ஜி-7 நாடுகள் மத்தியில் கனடாவின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பாண்டில் துரிதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார கண்ணோட்டத்தில் அடிப்படையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பீட்டின் பிரகாரம், கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.9 ...

மேலும்..

பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ: மீட்பு பணிகளில் எட்மண்டன் வீரர்கள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த போராடிவரும் மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் எட்மண்டன் வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மாகாணத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை நோக்கி தீ தற்போது வேகமாக பரவி வருகின்ற நிலையில், ...

மேலும்..

“கறுப்பு யூலை 2017” நீதியை வேண்டி மீண்டும் ஒரு வேள்வி-கனடா

"கறுப்பு யூலை 2017" நீதியை வேண்டி மீண்டும் ஒரு வேள்வி- தாயகத்தில் யூலை 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் நீதிக்காக போராடி உயிர் நீத்த வீரர்களை நினைவுகூறும் வகையில் நேற்று மாலை 6மணிக்கு ஸ்காபரோ ஆல்பர்ட் காம்பெல் ...

மேலும்..

“சுவாமி விபுலாநந்தரின் 125 ஆவது பிறந்தநாள் விழா”-கனடா

முத்தமிழ் வித்தகர் பேராசிரியர் சுவாமி விபுலாநந்தரின் 125 ஆவது பிறந்தநாள் விழா ஸ்காபரோவில் ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற்றது. சுவாமி விபுலாநந்தர் கலை மன்றம்-கனடா உறுப்பினர்கள் ஒன்றுகூடி பேராசிரியர் சுவாமி விபுலாநந்தரின் 125 வது பிறந்தநாள் விழாவை ...

மேலும்..

பிரதமருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சிரிய தம்பதியினர்

சிரியா உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புகலிடம் பெற்ற தம்பதியினர், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்டியுள்ளனர். 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கல்கேரியில் குடியேறிய அஃப்ரா மற்றும் மொயி பிளால் என்ற தம்பதியினரே ...

மேலும்..

கனடாவுக்கு புகலிடம் கோரிய துருக்கியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா குடியமர்வு துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் கனடாவில் ...

மேலும்..

ஸ்காபுரோவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை பெண் மரணம்

ஸ்காபுரோவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையை சேர்ந்த சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண் உயிரிழந்துள்ளார். மிட்லேண்ட் மற்றும் எக்லின்டன் சந்திப்புக்கு அருகாமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த விபத்து சம்பவித்துள்ளது. ரொறன்ரோ போக்குவரத்துச் சபையின் பேருந்தில் இருந்து இறங்கும் போது கால் தவறி வீழ்ந்த நிலையில், ...

மேலும்..

அவுஸ்ரேலிய செனட்டர் பதவியை இராஜினாமா செய்த கனேடியர்

கனேடியரான லோரிஸ்ஸா வாட்டேர்ஸ், தனது அவுஸ்ரேலிய செனட்டர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இரட்டைப் பிரஜாவுரிமை காரணமாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவில் இரட்டைப் பிரஜாவுரிமை காரணமாக பதவி விலகும் இரண்டாவது செனட்டர் இவராவார். ஏற்கனவே இவரது கட்சி ...

மேலும்..

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் விபத்து நிகழ்ந்துள்ளது. இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் ...

மேலும்..

‘ஆட்டம், பாட்டம் சரி; ஆனால், நிர்வாண நடனம் கூடாது’

`ஆட்டம்,பாட்டத்தோடு கொண்டாடுங்கள். ஆனால் நிர்வாணமாக நடனம் ஆட வேண்டாம்`-இது மத்திய கனடாவில் நடந்த விழா ஒன்றுக்கு வந்தவர்களுக்கு அந்நாட்டு காவல்துறை விடுத்த கட்டுப்பாடாகும். சஸ்கட்செவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையும் `தி க்ரவென் கண்ட்ரி தண்டர்` இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குத்தான் கனடா காவல்துறை ...

மேலும்..

ஆர்டிக் பிராந்தியம் மீது மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுக் காவல் நடவடிக்கையில் தாமதம்

ஆர்டிக் பிராந்தியம் மீது ஆளில்லா விமானம் மூலம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுக் காவல் நடவடிக்கை, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த ஆளில்லா விமானம் மிகவும் பெரியதாக காணப்படுவதாகவும், அதனால் அது ஒருவகை ஏவுகணையாகவே வகைப்படுத்தப்படுவதாகவும், அதனால் அந்த ஆளில்லா ...

மேலும்..