பிரதான செய்திகள்

இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்க முடியும்: சட்டத்தரணி நிரான்

இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்க முடியுமெனவும், விசாரணைகளில் ஈடுபட முடியாது என இலங்கை அரசாங்கம் கூறியவை பொய்யான கருத்துக்கள்  எனவும் தெற்காசிய சட்ட கல்வி மையத்தின் இணை ஸ்தாபகரும் சட்டத்தரணியுமான நிரான் அன்கேற்றல் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் சாசனத்தின் ...

மேலும்..

நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகறிற்கு வழங்கப்பட்ட இரகசியத்தகவலுக்கு அமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் , தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ,கிளிநொச்சி குற்றத்தடகவியல் பொலிசார் கொண்ட குழுவினர் நெத்தலியாறு பகுதிக்குச் சென்று ...

மேலும்..

கேப்பாபிலவில் உக்கிரமடைந்தது போராட்டம்!!

கேப்பாபிலவில் உக்கிரமடைந்தது போராட்டம் சிங்கள மக்களும் ஆர்பாட்டத்தில் இணைந்தனர்.23வது நாளாக தொடரும் போராட்டம்.படை முகாமின் உள்ளே உல்லாச பயணிகளின் பஸ் சென்றதால் பதற்றம்.மக்கள் றோட்டிலே ராணுவம் குடும்பங்கள் உல்லாசம்.இதுவா நல்லாட்சி.காணி மீட்காது போராட்டம் ஓயாது என மக்கள் தெரிவிப்பு. ...

மேலும்..

க.பொ.த சாதாரண தரப் பரிட்சைப் பெறுபேறுகள் நாளை.

க.பொ.த சாதாரண தரப் பரிட்சைப் பெறுபேறுகள் நாளை 26.03.2017 காலைவேளையில் அல்லது மாலைவேளையில் வெளியாகும் என பரிட்சைத் திணைக்களம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.  

மேலும்..

மாகாண சபைத் தேர்தலையும் பிற்போட முயற்சி.!

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நிறைவுக்கு வரவுள்ளது. எனினும் குறித்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலையும் நடத்தாது காலம் கடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்.

60வருட ரஷ்ய இலங்கை நட்புறவை மேலும் 100 வருடங்களுக்கு முன்னெடுத்துச் செல்லும் வகையில் மேலும் வளர்த்துக்கொண்டு இலங்கை தாய்நாட்டுக்குத் தேவையான பல்வேறு அபிவிருத்தி நன்மைகளைப் பெற்றுக்கொண்டு ரஷ்யாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று ...

மேலும்..

ஹப்புத்தளையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் வைத்தியசாலையில்

ஹப்புத்தளை - வெலியத்தென்ன பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடும்ப பிரச்சினையின் காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

கலப்பு நீதிமன்றம் அமைக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சர்வதேச கட்டளைகளுக்கு அடிபணிய ஒருபோதும் தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். ஐக்கிய ...

மேலும்..

சர்வதேச விசாரணைக்கு சூத்திரதாரி மஹிந்தவே!

சர்வதேச விசாரணைக்கு சூத்திரதாரி மஹிந்தவே! - பான் கீ - மூனை அழைத்துவந்து இணங்கியவர் அவரே என்கிறார் பொன்சேகா  "போர் முடிந்த சூட்டோடு முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி - மூனை இலங்கைக்கு அழைத்து போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ...

மேலும்..

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற தந்திரோபாய நகர்வு தேவை! – இலங்கையை வலியுறுத்துகின்றது பிரிட்டன் 

"ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கான கால எல்லையுடனான தந்திரோபாயத்தை இலங்கை உருவாக்க வேண்டும்." - இவ்வாறு பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பிரதி அமைச்சர் ஜொய்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் ...

மேலும்..

தமிழ் உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும்! – குற்றவாளிகளுக்குத் தண்டனை அவசியம் என்றும் யாழில் தெரிவித்தார் சந்திரிகா (photos)

"தமிழ் மக்களில் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே என்று அவர்களின் உறவுகள் கதறுகின்றார்கள். எனவே, இந்த உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும். அதேவேளை, பொதுமக்களைக் காரணமின்றிக் கொன்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்ற வாளிகளுக்குத் தண்டனை அவசியம்.'' - இவ்வாறு ...

மேலும்..

முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை தொடர்ந்தும் அச்சுரூத்தும் கடற்படை.

முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை தொடர்ந்தும் அச்சுரூத்தும் கடற்படை-3ஆவது நாளாக போராட்டம் தொடர்கின்றது. தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து ...

மேலும்..

அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் பிரதமர் ரணிலுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த மஹிந்த!

நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன  முடிவடைந்த பின்னர், ...

மேலும்..

ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துக! – அரசை வலியுறுத்துகின்றது கூட்டமைப்பு 

"ஐ.நா. தீர்மானங்களின் உள்ளடக்கங்களை அவற்றில் உள்ளவாறே இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. "தமிழ் மக்கள் தமது பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள். எனவே, அவர்களது இடர்களுக்கும், வேதனைகளுக்கும் கூடிய விரைவிலே ஒரு முடிவு காணப்படவேண்டும்" ...

மேலும்..

விமல் வீரவன்சவின் உயிருக்கு ஆபத்து?

வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமல் வீரவன்சவின் உடல் நிலை குறித்து வைத்தியர்கள் நேற்று இரவுபரிசோதித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மஉதேசாந்த தெரிவித்துள்ளார். விமல் வீரவன்சவின் ...

மேலும்..