பிரதான செய்திகள்

தியத்தலாவ விபத்தின் சாரதிகளுக்கு விளக்கமறியல்

நாட்டையே உலுக்கிய தியத்தலாவ பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகன சாரதிகளையும் ...

மேலும்..

புகையிரத பராமரிப்பிற்கே கடன் வாங்கும் சூழ்நிலை – அமைச்சர் பந்துல

புகையிரத பராமரிப்பு பணிகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் புகையிரத சேவை தொடர்ச்சியாக நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ...

மேலும்..

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் பல குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

மாற்றமடைந்த தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்ற நிலையில் இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரம் இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது ...

மேலும்..

அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டமானது பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 40 ...

மேலும்..

மே 18 வாரத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க தீர்மானம்

இந்த வருடத்தில் இருந்து மே 18 இனப்படுகொலை வாரத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க வேண்டும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டை பரவலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் என யாழில் சிவில் அமைப்புக்கள் கூடி ஆராய்ந்துள்ளன. யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் ...

மேலும்..

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மூத்த சுவாமிகளால் இலங்கை குருமார்களுக்கு ஆசீர்வாதம்

முன்னாள் பிரிடிஷ் யூரோப்பியன் கவுன்சில் பாராளுமன்றத்திற்கான முன்னாள் இலங்கைக்கான சிறப்பு தூதர் தக்கூர் நிரஞ்சன் தேவா ஆதித்யா அவர்களின் ஏற்பாட்டில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மூத்த சுவாமிகள் கோவிந் தேவ் கிரிஜி மகாராஜ் அவர்கள் ஹோட்டல் கிங்ஸ்பரியில் சர்வமத தலைவர்கள் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலின் பின்புலத்தில் ராஜபக்ஷக்கள் – இரா.சாணக்கியன்

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என ...

மேலும்..

தியத்தலாவை விபத்து தொடர்பில் இருவர் கைது

தியத்தலாவை  நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024’ கார் ஓட்ட பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆபத்தான  முறையில் ...

மேலும்..

இன்று சர்வதேச புவி தினம் 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் திகதி சர்வதேச புவி தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகள், வேகமாக அதிகரித்து வரும் மாசுபாடு, காடழிப்பு மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். நாளுக்கு ...

மேலும்..

மாணவர்களுக்கான அரிசி விநியோகம் இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

தியத்தலாவையில் இன்று இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ கார் பந்தய விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். பந்தயத்தில் ...

மேலும்..

கல்முனையில் 28வது நாளாக தொடர் போராட்டம் – தீர்வு கிட்டுமா ?

(கஜனா சந்திரபோஸ்) அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பிரதேச செயலக பிரிவுகளை வர்த்தமானிபடுத்த வேண்டிய பொறுப்பு உள்நாட்டில் உள்ள அமைச்சுக்கு உரித்துடையது எனவும் நடைமுறையில் இது மாறுபட்ட விடயமாக காணப்படுவதாகவும் உடனடியாக அமைச்சரவை தீர்மானத்தை வர்த்தமானி படுத்த வேண்டும் எனவும் கல்முனை வடக்கு பிரதேச ...

மேலும்..

மூடப்படும் மதுபானசாலைகள்

இலங்கையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன. மேலும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

யாரையும் கைவிடப்போவதில்லை – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் ...

மேலும்..