இந்தியச் செய்திகள்

இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி பொலிஸ் காவலில்

இந்தியாவிற்குள் ஊடுருவிய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை 12 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு மகராஜ்கஞ்ச் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் சோனாலி பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த ...

மேலும்..

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

இரண்டு நாட்களாக நடைபெற்ற வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மீள பெறப்பட்டதையடுத்து, இன்று (புதன்கிழமை) காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க ஆரம்பித்துள்ளன. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் குறித்து சோனியா காந்தியுடன் மம்தா பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி நிறைவடையவுள்ளதோடு, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்: அதிகளவான மக்கள் வெளியேற்றம்

இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் முன்னெடுத்து வரும் தொடர் தாக்குதலையடுத்து, அப்பகுதியிலிருந்து அதிகளவான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இராணுவ ஒப்பந்தத்தை மீறி ஜம்மு – காஷ்மீர் ரஜுரி மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் மூன்றாவது நாளான நேற்றும் (திங்கட்கிழமை) ...

மேலும்..

ப.சிதம்பரத்தின் வீடுகளில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் (சி.பி.ஐ) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 9பேர் கொண்ட குழுவினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவர்களின் வீடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வீடுகள் ...

மேலும்..

இலங்கை – ஐரோப்பா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு: ஜி.கே.வாசன்

இலங்கை மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கிடையில் அண்மையில் ஏற்பட்படுத்தப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் அத்தோடு, இவ் ஒப்பந்தத்தால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ...

மேலும்..

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை சமாளிக்க நடவடிக்கை: விஜயபாஸ்கர்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை சமாளிக்க இரண்டாயிரம் தனியார் பேருந்துகளை அதிகப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ...

மேலும்..

மாணவர்களுக்கான உணவில் பாம்பு…!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பாடசாலை  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்தது பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள அரசாங்கப் பாடசாலையொன்றில்  நேற்று முன்தினம் பதினோராம் திகதி வியாழக்கிழமை  மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை ...

மேலும்..

இலங்கையில் மோடியை வேவு பார்த்த மர்ம இளைஞர்…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த வாகன பேரணியில் யாருக்கும் தெரியாமல் தானும் கலந்து கொண்டு  அவரைப் பின் தொடர்ந்து வேவு பார்த்தவரென நம்பப்படும்  மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நரேந்திர மோடியுடன் பயணித்த பிரபுக்களுக்கான பாதுகாப்பு பிரிவு மோட்டார் சைக்கிள்களுடன் ...

மேலும்..

முதன்முறையாக தரப்பட்டியல் இன்றி பிளஸ் 2 பரீட்சை முடிவுகள் வெளியானது!

தமிழகத்தில் முதன்முறையாக தரப்பட்டியல் இன்றி, பிளஸ் 2 பரீட்சை முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளன. காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குநரகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவியினால் வெளியிடப்பட்டதுடன், கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ...

மேலும்..

இலங்கை விஜயத்தின்போது மோடி பேச்சுவார்த்தை நடத்த கொங்கிரஸ் வலியுறுத்தல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது, தமிழக மீனவர்களின் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் இலங்கை அரசுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தி பிரச்சினையை சரியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று கொங்கிரஸ் கட்சி சார்பில் அதன் ...

மேலும்..

தமிழக ஆட்சியாளர்கள் ஊழல் செய்வதில்தான் கவனம் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அரசு கவலைப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியின் போது தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நீர்நிலைகள் முன்கூட்டியே தூர்வாரப்பட்டன என கொளத்தூர் தொகுதியில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை பார்வையிட்டபின் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திமுக செயல்படுத்திய திட்டங்கள் குடிநீர் ...

மேலும்..

“பரீட்சை எழுத வேண்டுமா? உள்ளாடைகளைக் கழற்றுங்கள்”

கேரளாவில், ‘நீட்’ எனப்படும் உயர்கல்விக்கான அனுமதிப் பரீட்சை எழுதச் சென்ற மாணவியரிடம், உள்ளாடைகளைக் கழற்றிவிட்டு வருமாறு கூறிய நான்கு ஆசிரியர்கள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில், ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதிகாண் மற்றும் அனுமதிப் பரீட்சை நடப்பது வழக்கம். இதில் சித்தியெய்துபவர்கள் அரச ...

மேலும்..

தினகரனை விடுதலை செய்யும்வரை போராட்டம் ஓயாது: நாஞ்சில் சம்பத்

டி.டி.வி.தினகரனை விடுதலை செய்யும்வரை போராட்டம் ஓயாது என்று அ.தி.மு.க-வின் தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரனை விடுதலை செய்யுமாறு கோரி அவரது ஆதரவாளர்கள் நேற்று (திங்கட்கிழமை) மதுரை மாவட்டம் மேலூர் பேரூந்து நிலையத்தின் அருகில் போராட்டம்  ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட நாஞ்சில் ...

மேலும்..

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு

போக்குவரத்துத் துறை அமைச்சருடன் நடைபெற்ற ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையானது தோல்வியடைந்ததை தொடர்ந்து, காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு  போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. போக்குவரத்து துறை மற்றும் தொழிற்சங்க ...

மேலும்..