கவிதைக் களம்

என் நண்பன்…

தெருவெல்லாம் தேவதைகள் நிறைந்திருக்க அதைப் பாடக் கவிஞர் பலர் பிறந்திருக்க அதனாலே நம் நட்பு மறைந்திருக்க வருகிறேன் தமிழோடு அதன் பெருமை நிலைநிறுத்த!! உனைப் போல் நண்பனைத் தேடி எனைப்போல் அலைந்திடும் உயிர்களும் கோடி உயிராய் இருக்கும் நண்பனே , நீயோ எனக்குள் ஒருவன் உனை நான் பெற்றதால் நானோ ஆயிரத்திலொருவன் !! ஊரெல்லாம் திரிந்தோம் ஓய்வின்றி ...

மேலும்..

நிஜ வாழ்க்கை!!

உயர்தரம் வரைக்கும் ஒன்றாய்ப் படித்தோர் நுங்கு தொடக்கம் நூடில்ஸ் வரைக்கும் பங்கு போட்டு பழகித் திரிந்தவர் அப்புறம் பிரிவார் ஆளுக்கொரு திசை. இரண்டு தசாப்தம் விரண்டு ஓடும். நாற்பதைத் தாண்ட ஞாபகம் தளிர் விடும். கூடப் படித்த குட்டிகள் பொடியன்கள் தேடிப் பார்க்க நாடும் மனசு. பள்ளி ஞாபகம் பனியாய்க் கொட்ட ஒவ்வொரு ஆளும் எவ்வாறு இருக்கிறார் விசாரிக்கும் போது விசனமே மிஞ்சும். ஒருத்தன் பெரிய வருத்தத்தில் என்பார். இன்னொரு நண்பன் இன்னாலில்லாஹி. யாவாரத்தில் சிலபேர் இருக்கிறார் பிஸியாய் நாலஞ்சு பேரு வேலைல ...

மேலும்..

விடியல்

நீல வானில் உலா வந்த நிலவு அழைத்துப் பேசியது பூங்காற்றை. விசுக்கென்று கிளம்பியது காற்று பசும் மரக்கிளைகளில் ரகசியப் பேச்சு. சருகுகள் பறந்தன ஆற்றுநீர் விழித்துக்கொண்டாட்டம் மலையருவி வீழ்ந்த இடமெல்லாம் முத்துப் பரல்களாய் நிலாத்துண்டுகள் பூக்கள் எல்லாம் சோம்பல் முறித்தன. விடியப் போகும் செய்தியை இப்படிச் சொல்லி அனுப்பியது குறும்பு நிலா. சூரியனின் வருகையை- 'தாமரைக்கு'

மேலும்..

எது முக்கியம்!!

மாபியாவாய் இருப்பவனை மனுசனாக்க ஆளில்லை சாபியா ஹனபியா என சண்டைக்கு பலர் இருக்கு காலியான வயிற்றோடு கால்வாசிப் பேர் இருக்கார் பேலியோவா சோறா என பெரும் போட்டி நடக்கிதுங்கே பா ஜ காரன்கள் பச்சையாய் கொல்கின்றான் பீ ஜேக்கு ஏசுவதிலேயே பிஸியானார் பல பேர்கள் தெருக்குத் தெரு திரிவோரை தேடிப் பார்க்க ஆளில்லை துருக்கியின் ஆட்சிபற்றி துடிக்கிறது விவாதங்கள் ஊத்தவாளி நிறைந்திருக்கு ஊரெல்லாம் நாறுகிறது பகுபாலி-2 பார்க்க பதறுகிறது ...

மேலும்..

சூடு!!

முதுகால வடியிது முகத்தத் தீய்க்குது இதுகால வரைக்கும் இல்லாத சூடு போல். வெளிய இறங்கேலா விறாந்தைல உறங்கேலா குளியல் முடிந்தவுடன் குப்பென்று வேர்க்குது ஜன்னல துறந்தாலும் ஒண்ணும் ஆகல்ல கண்ணால பார்க்கேலா கடுமையா குத்துது வெயில்ல போய் வந்தா கெய்ல்ல போல் ஆகி முகமெல்லாம் கறுக்குது ஜெகமே வெறுக்குது தொண்ட காயிது மண்ட தீயுது எண்ட உம்மாவே என்ன சூடிது நுளம்புக் கடிக்கு நூல் சேலை போர்த்தினா கிளம்புது வியர்வை குழம்புது மூளை தோலெல்லாம் சொறியுது தொடர்ந்து ...

மேலும்..

உன் மடியில்!

மனதோடு உன்னுடன் வாழ்ந்து விட்டேன்” ஆனால்” உன்னை மணம் முடிக்க என்னால் முடியவில்லை! ஆதலால்” மரணித்து விடுகிறேன்’ உன் மடியில்! என் உயிர் பிரிய உன் மடி வேண்டும் எனக்கு..!!!

மேலும்..

உறுதி கொடு!!

என்னை ஒரு நொடியாவது நீ பார்க்கவேண்டுமென எனக்கு ஆசை…. அனால் நீயோ அதற்க்கு மறுக்கிறாய்… கனவிலாவது வந்து பார்ப்பேன் என்று உறுதி கொடு எனக்கு… உனக்காக உறங்கிக்கொண்டிருபேன் என் வாழ்கை முழுவதும்…..

மேலும்..

ஏப்ரல் விடுமுறையில்…

கூட்டமாய் சிலபேர் குடும்பமாய் சிலபேர் நாட்டைச் சுற்றுவார் நாடியதைப் பார்ப்பார் அத்தியவசிய சேவையில் அகப்பட்டுக் கொண்டோர் இத்தினத்திலும் வேலையா இல்லாளிடம் படுவார். காக்கா தம்பி எல்லாம் களிப்போடு சுற்றுவதை ஏக்கமும் இம்சையுமாய் இரசிப்பார் வெளியில் உள்ளோர். செல்லாத இடத்துக்கும் ஷெல்பியை செற் ஆக்கி பொல்லாத போஸ்ட் இடுவார் போக முடியாதோர். பள்ளியிலே தங்கியிருந்து பாடங்கள் படிப்பதற்காய் உள்ள விடுமுறையை ஒதுக்குவார் சிலபேர்கள் படுத்துப் போக்குவார் படம் பார்த்துப் போக்குவார் அடுத்தடுத்து போஸ்ட் போட்டு அனேகம்பேர் ...

மேலும்..

என்னவென்று வரவேற்பேன் என்னினிய புத்தாண்டே……..!

  ஜி. ஸ்ரீநேசன்¸ பாராளுமன்ற உறுப்பினர்¸ மட்டக்களப்பு. எத்தனையோ ஆண்டுகள் வந்தன – தமிழர்க்கு ஏமாற்றம் மட்டுமே தந்தன – ஆதலால் சித்திரைப் புத்தாண்டே – உன்னை சிறப்பாக வரவேற்க மனமில்லை காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் கண்ணீரும் கதறல்களும் ஓயவில்லை கைதிகளாய் அடைக்கப்பட்டோர் - அரசின் கண்களுக்கு முழுமையாய்த் தெரியவில்லை காணிகளை இழந்தோரின் கதறல்கள் - ...

மேலும்..

ட்ரிப் போகும் படலம்!!

எங்க போக என்று எல்லோர்க்கும் சிந்தனை டெங்கும் சூடும் என்று டேஞ்சராய்க் கிடக்குது நுவரெலியா போவமெண்டா எவரும் அங்க போவதாலே ரோட்டு புளக் ஆக மாட்ட வேண்டும் பல மணிகள் கண்டி பார்ப்பமென்றால் பன்றிக் காய்ச்சலாமே கிண்ணியா கிழக்கினிலே கிடக்குதாமே டெங்கு செம்பு வத்தையிலே செங்குத்தா ஏறனுமே வம்பு வருமோ வெப்பத்தால் வட பகுதி ட்ரிப் சென்றால் ஆளுக்கொரு இடம் சொல்லி நாளும் குறித்த பின்னால் வேளைக்கு ...

மேலும்..

காதல்….

நீ இல்லாத தருணங்கள்.... நீ இல்லாத தருணங்கள் உன்னோடு வாழ்ந்த அழகிய காதல் எண்ணிப்பார்க்கையில் என் விழிகளில் கண்ணீரால் எழுதுகிறேன் ...! நீ வார்த்தையால் .. சொன்னதை நான் ... கண்ணீரால் எழுதுகிறேன் ...! கவிஞன் நான்... கற்பனையில் கவிதைகளை சுடச்சுட சுட்டு இறக்கும் கவிஞன் நான்... அதிலும் உனக்கான ...

மேலும்..

காதிக் கோர்ட்டில்…..!!

தாரம் என்று சொன்னதைத் தரவில்லை- ஆதலால் தாரம் எனக்கு வேண்டாம் தலாக்குத் தாருங்கள். தாரம் என்று சொன்னதற்கு ஆ'தாரம்' இருக்கிறதா ஆ..தாரம் என்று சொன்னீர் அன்று கேட்டபோது. சே'தாரம்' ஆக்க வேண்டாம் செய்த ஒப்பந்தத்தை சே..தாரம் என்று சொன்னதை செய்து தராது போனால் தாரம் வேண்டாமென்று தூரம் ஆகுதல் தரமா? பொருளா? தாரமா பொறுமையாய் முடிவு செய்வீர் பொருளா'தாரம்' இன்றேல் பொருளில்லை வாழ்விலே பூ'தாரம்' ஆக்க வேண்டாம் பொருள் ...

மேலும்..

ஷொப்பிங் பேக்!!

மளிகைக் கடை உயிர் நாடி. மழைக்குத் தொப்பி. குப்பத்துக் குழந்தையின் கொமட். பயணத்தில் படிக்கம். தண்ணீர்க் கசிவின் தற்காலிகத் தீர்வு. பாத்திரம் இல்லாதோர்க்கு பத்திரமாய் கஞ்சி வழங்கும் கலயம். ஒட்டாது கொட்டாது உள்ள தானியத்தை பட்டுப் போல் அரைக்க பாதுகாப்பு அரண். கைக்கு உறை. காயத்துக்கு கட்டு. பல்லி கொசு படாது உள்ள பொருள் பாதுகாக்க சொல்லி வைத்த கவசம் பட்டம் விட முட்டையிட சிட்டுக்களுக்கு சின்னக் கூட்டாளி சூழல் ஆட்சியில் ஒரு ஊழல் உறுப்பினர் கான் வழி அடைக்கும் வீண் ...

மேலும்..

ஐடி என்பது பொய்டி!!

பரமசிவனின் ஐடியிலே பாம்பு கேட்டது கருடா ஹவ் ஆர் யூ? யாரும் சொந்த ஐடியில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது -அதில் அர்த்தம் உள்ளது சொந்தப் பெயரில் ஐடி வைத்து ஷெல்பி போடும் பெண்கள் - எந்தப் புற்றில் பாம்பிருக்கும் என்று அறியார் பாவம். அதிகம் பேர் கொமண்ட் செய்து ஆஹா ஓஹோ என்பார். விதி வாழ்வில் ...

மேலும்..

முட்டாளாக்கல்!!

முதற் தேதி தேவை இல்லை முட்டாளாய் ஆக்கி விட இதைத்தானே செய்கின்றார் எந் நாளும் சில மனிதர். முன்ன ஒரு காலத்திலெ முருங்க மரக் காட்டுக்குள்ள முன்னூறு அடி அவுலியா என முட்டாளாக்கிக் கதை சொல்லல் அரபியிடம் காசி வாங்கி அரைவாசி பையில் போட்டு சிறிய தொகை தானம் செய்து செம்மலாகி முட்டாளாக்கல் ஆண் ஐடி போஸ்ட் போட்டு அதற்குப் ...

மேலும்..