செய்தித் துளிகள்

13 வயது பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

கல்கிரியாகம - தம்புகஹல்மில்லவெவ பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனது சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவனது வீட்டின் ஜன்னலிலேயே மாணவனது சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கல்கிரியாகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த மரணம் தற்கொலையா? அல்லது கொலையா?என அறியும் ...

மேலும்..

ஜி-7 மாநாட்டுகான விஜயத்தினை நிறைவு செய்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பினார்… (Photos)

இலங்கைக்கு பல நன்மைகளை பெற்றுக்கொடுத்த ஜி-7 மாநாட்டுகான விஜயத்தினை நிறைவு செய்துகொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (29) பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்தார்.

மேலும்..

பதுளையில் மினி சூறாவலி பாதிப்புக்கள் இல்லை…

பதுளையை ஊடறுத்து சென்ற மினி சூறாவளி பாரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், ஆங்காங்கே மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன என தெரிவிக்கப்பட்டது. 29 அன்று அதிகாலை ஏற்பட்ட இந்த கடும் காற்று கெப்பட்டிபொல பகுதியை ஊடறுத்து சென்றுள்ளது.

மேலும்..

சோமஸ்கந்தா கல்லூரியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களில் முக்கியமானவர் அதிபர் பொன். கனகசபாபதி அவரின் நினைவாக “கனகதீபம் மலர்” வெளியீடு

அமரர் அதிபர் பொன். கனகசபாபதி அவர்களின் நினைவாக கனகதீபம் என்ற மலரை வெளியிடும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிற திரு லோகன் கணபதி அவர்களே. இந்த விழாவினை ஒழுங்கு செய்துள்ள சோமாஸ்கந்த கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கம். நான் சற்றுத் தாமதமாக இந்த அரங்கிற்குள் நுழைந்தபோது ...

மேலும்..

அதிகம் அதிகம் தொலைபேசியில் பேசுபவரா நீங்கள்…ஒரு எச்சரிக்கை…

முழுதாய் படித்து இனி பேச்சை தொடர மனம் வருமா எனப்பாருங்கள். ஒரு சில ஆண்டுக்கு முன்னர் ரஷ்ய செய்தியாளர்களைச் சேர்ந்த இரு நபர்கள் மொபைலின் கதிர்வீச்சு எந்த விதத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மக்களிடத்தில் விளக்குவதற்காக ஒரு அரங்கத்தில் அனைவரையும் கூடச்செய்தனர் ...

மேலும்..

ஜப்பானில் நடைபெறும் G7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் மைத்திரி பங்கேற்பு….

ஜப்பானில் நடைபெறும் G7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (25) பிற்பகல் ஜப்பான் பயணமானார். G7 மாநாட்டின் தற்போதைய தலைவரான ஜப்பான் பிரதமர் சிங்சோ அபே அவர்களின் விசேட ...

மேலும்..

பிரான்ஸ் உறவுகள் மூலம் தாலிக்குளம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வவுனியா பூவரசங்குளம் தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைகோட்டுக்கு உட்பட 40 மாணவர்களுக்கு தாலிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ப.அந்தோணிபிள்ளை அவர்கள் தமிழ் விருட்சத்திடம் அவர்களின் நிலையை எடுத்து கூறி அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பிரான்ஸ் வாழ் உறவு மூலம் 21.05.2016 அன்று தாலிக்குளம் அ.த ...

மேலும்..

மடு மாந்தை மேற்கு உதைபந்தாட்ட ஒன்றியத்திற்கு (லீக்) உதைபந்தாட்ட பயிற்சி உபகரணங்கள் வழங்கிவைப்பு – அமைச்சர் டெனிஸ்வரன்…

மன்னார் மாவட்ட, மடு மாந்தை மேற்கு உதைபந்தாட்ட ஒன்றியத்தின் (லீக்) வேண்டுகோளுக்கு இணங்க, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ரூபா 50,000 நிதி ஒதுக்கப்பட்டு உதைபந்தாட்ட பயிற்சிக்காக பயிற்சி உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 21-05-2016 காத்தான்குளத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பொருட்களை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ...

மேலும்..

மஹா புத்கமுவ மக்களுக்கு வெள்ள நிவாரணம் : றிசாத் பதியுதீன் வழங்கல்….(Photos)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மகா புத்கமுவ பிரதேச மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் , அமைச்சருமான  றிசாத் பதியுதீன் இன்று  (23/05/2016), வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.  

மேலும்..

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் பொங்கலை முன்னிட்டு பெண்மணி ஒருவர் பறவைக்காவடி மூலம் நேர்த்திகடன் தீர்த்தல்….(Photo)

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் பொங்கல் முன்னிட்டு (23.05.2016) திங்கள் கிழமை ஒரு பெண்மணி தனது நேர்த்திகடனை இன்று பறவை காவடி எடுத்து செலுத்துகின்றார். இவ்வாறு தனது நேர்த்திகடன் செலுத்துவது முன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

இயற்கை அனர்த்தம் வேதனை தருகிறது

நாட்டில் ஏற்பட்ட அண்மைக்கால இயற்கை அனர்த்தமானது மிகவும் வேதனை தருவதாகவும், இதிலிருந்து எமது மக்களை மீட்டெடுக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உடனடி நடவடிக்கைகளும், எமது மக்களினதும், இந்தியா உட்பட்ட வெளிநாடுகளின் மனிதாபிமான உதவிகளும் ஆறுதல் அளிப்பவையாக அமைந்துள்ளன என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம் ...

மேலும்..

பொலிஸாரிடம் அபயம் கோரும் நாய்…..(Photos)

அவிஸ்ஸாவளை பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் அபயம் கோரும் நாய் ஒன்று!!!

மேலும்..

தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி -தமாகா தலைவர்கள் சந்திப்பு….(Photos)

தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி -தமாகா தலைவர்கள், தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள்.

மேலும்..

காத்தான்குடி உணவகமொன்றில் வாங்கிய இறைச்சி ரொட்டிக்குள் ஆணி…(Photos)

காத்தான்குடியிலுள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் இறைச்சி ரொட்டி வாங்கி சாப்பிட்ட போது அதனுள் ஆணி ஒன்று இருந்துள்ளது. இதனை அவர்கள் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் சென்று முறையிட்டுள்ளார்கள். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தாங்கள் இதனை பொதுச்சுகாதார பரிசோதகரிடம் தகுந்த ...

மேலும்..

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நான்கு நாட்கள் விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வெள்ளிக்கிழமை மூட ப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இத்துடன் எதிர்வரும் திங்கக்கிழமை 22.5.2016 அன்று விசாக் தினத்தை முன்னிட்டு விடுமுறை என முதலே அறிவிக்கம்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது ஆகையால் தொடர்ந்து நான்கு நாட்கள் பாடசாலை விடுமுறை.

மேலும்..