விளையாட்டு

100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.   2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை பெற பாரீஸ் (பிரான்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) ...

மேலும்..

எத்தனை கோடி கொடுத்தாலும் யாரையும் ஏமாற்ற மாட்டேன்… ரசிகர்களின் மனதை வென்ற கோஹ்லி !!

பல கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருந்தும், குளிர்பான விளம்பரத்துக்கு தன்னால் நடிக்க முடியாது என இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வம் மிக்கவர். இவருக்கு அண்மையில் ...

மேலும்..

உலக தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டில் கின்னஸ் சாதனை புரிந்தவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கனடா நாட்டில் நடைபெற்ற உயரம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகளப்போட்டியில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் 3தங்கப்பதக்கங்கள் வென்ற கே.கணேசன், குண்டு எறிதல் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம்,ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதலில் 2 வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ்.மனோஜ்,பயிற்சியாளர் ரஞ்சித், விளையாட்டில் கின்னஸ் உலக சாதனை புரிந்த பி.கெளதம் நாராயணன்(கிரிக்கெட் மற்றும் டென்னிஸ்), ஓ.ஜி.ஜெயன் (ஹாக்கி), வி.டி.விக்னேஷ் குமார் (சைகிளிங்)ஆகியோர், 13 செப்டம்பர்  2017 அன்று, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இந்தசந்திப்பின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு உடனிருந்தார்.  

மேலும்..

டோனி உலகக்கிண்ண தொடரில் விளையாடுவாரா? பயிற்சியாளரின் இறுதி பதில் இதுதான்

வயது மற்றும் உடற்தகுதி காரணமாக இங்கிலாந்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரில் டோனி விளையாடுவாரா? என்ற கேள்விக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இறுதி பதில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டோனி போன்ற ஒரு ஜாம்பவானை ...

மேலும்..

துப்பறிவாளன் பட வசூலில் டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி: விஷால் அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பதவியேற்பு விழாவில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் வசூலிக்கப்பட்டு விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்து இருந்தார். அதன்படி ...

மேலும்..

திசாரா பெரேராவின் அதிரடி ஆட்டம்! உலக அணிக்கு வெற்றி

பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்று(13) நடைபெற்ற 2-வது T-20 போட்டியில் உலக பதினொருவர் அணி, ஒரு பந்து மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. உலக ...

மேலும்..

முரளீதரனின் பெயர் சூட்டப்பட்ட கிரிக்கட் மைதானத்தின் பெயர் நீக்கம்!

மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், இலங்கையின் கண்டி மாவட்டத்திலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்திற்கு இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. தற்போது தன் மகன் முத்தையா முரளீதரனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முரளீதரனின் தந்தை முத்தையா மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ...

மேலும்..

இந்தியா முதல் இடத்தை பிடிக்க ஆஸ்திரேலியாவை 4-1 வீழ்த்த வேண்டும்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன. வீராட் ...

மேலும்..

திருமணம் பற்றி கேள்வி கேட்பதா? : ஸ்ரேயா ஆவேசம்.

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 60 வயது நடிகர் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தால் யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் ஒரு நடிகை குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால், ...

மேலும்..

பாகிஸ்தான் தொடரை கைப்பற்றும் முயற்சியில் இலங்கை!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஊக்குவிக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தோல்வியை தொடர்ந்து அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திர வீரர் மேத்யூஸ் பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுடனான ...

மேலும்..

பாபர் ஆஸம் பிரமாதமான ஆட்டம்: உலக லெவன் அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்

தங்கள் நாட்டில் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் கொண்டு வரும் முகமாக நடத்தும் டி20 தொடரின் முதல் போட்டியில் உலக லெவன் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. 7 மணிக்கு போட்டி தொடங்கும் முன்பாகவே 9,000 போலீஸ் அதிகாரிகள், துணை ...

மேலும்..

பயிற்சி…இளம் இந்தியா அதிர்ச்சி! * ஆஸி.,யிடம் தோல்வி..

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் ...

மேலும்..

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிருக்கு பெண் குழந்தை: இங்கிலாந்தில் பிறந்தது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொகமது அமிர் - நர்ஜிஸ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிர். மேட்ச் பிக்சிங் காரணமாக தடைபெற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பினார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் ...

மேலும்..

பாகிஸ்தான் – உலக அணி இன்று மோதல் -பாதுகாப்பு அதிகரிப்பு

உலக பதினொருவர் அணிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுதந்திரக் கிண்ண 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானின் லாஹுர் நகரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக உலக பதினொருவர் அணிக்கான 13 பேர் அடங்கிய குழாம் ...

மேலும்..

பிரபல கிரிக்கெட் வீராங்கனை ஜேன் பிரிட்டின் மரணம்

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை ஜேன் பிரிட்டின் புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார். இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்காகவும், Surrey உள்ளூர் அணிக்காகவும் கடந்த 1979லிருந்து 1998ஆம் ஆண்டு வரை விளையாடியவர் ஜேன் பிரிட்டின் (58). 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ...

மேலும்..