பிரித்தானியச் செய்திகள்

அரசியல் ஒருங்கிணைப்பு அவசியம்: பிரித்தானிய நிதியமைச்சர்

சிறந்த அரசியல் ஒருங்கிணைப்பின்மை, பிரெக்சிற்றை பாதிக்கும் என பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடத்தப்பட்ட பொருளாதார உச்சமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “பிரெக்சிற் தொடர்பில் ...

மேலும்..

இரண்டாவது கருத்துக்கணிப்பு எண்ணத்தை நிக்கோலா கைவிட வேண்டும்: தெரேசா மே

ஸ்கொட்லாந்தில் இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் எனும் எண்ணத்தை முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் கைவிட வேண்டும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இங்கிலாந்து பாடசாலை ஒன்றிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்துர் தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

ஒன்றிய பிரஜைகள் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகும் பிரித்தானியாவிலேயே வசிக்க வேண்டும்

பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகும் பிரித்தானியாவிலேயே வசிக்க வேண்டும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவில் உள்ள ஒன்றியப் பிரஜைகளின் நிலை தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து ...

மேலும்..

ஒன்றிய பிரஜைகள் அனுபவிக்க உரித்துடைய நலன்கள் தொடர்பில் அறிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னர், பிரித்தானியாவில் உள்ள ஒன்றிய பிரஜைகள் எத்தகைய நலன்களை அனுபவிக்க உரித்துடையவர்கள் என்பது தொடர்பில் விளக்கமான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் உரிமைகள் தொடர்பில் பிரதமர் தெரேசா மேயினால் நாடாளுமன்ற ...

மேலும்..

பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் விமானந்தாங்கிக் கப்பல்

ஸ்கொட்லாந்தின் Rosyth எனும் பகுதியில் இருந்து பிரித்தானிய றோயல் கடற்படைக்கு சொந்தமான விமானந்தாங்கிக் கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 பில்லியன் பவுண்கள் செலவில் அமைக்கப்பட்ட குறித்த எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் (HMS Queen Elizabeth) விமானந்தாங்கிக் கப்பல், தனது கடற்பயணம் ...

மேலும்..

பிரெக்சிற் தொடர்பில் சிறந்த உடன்படிக்கை எட்டப்படும்: டேவிட் டேவிஸ்

பிரெக்சிற் தொடர்பில் சிறந்த உடன்படிக்கை ஒன்று எட்டப்படும் என பிரித்தானியாவின் பிரெக்சிற் செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார். பி.பி.சியினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், ...

மேலும்..

ஒன்றியத்தில் நிலைத்திருக்க விரும்பினால் அதற்கான வாசல் திறந்தே உள்ளது!

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் நிலைத்திருக்க விரும்பும் பட்சத்தில் அதற்கான வாசல் திறந்தே உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதாக  ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) குறிப்பிட்டுள்ளார். பிரஸ்சல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு முன்னதாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் ...

மேலும்..

லண்டனில் 600 கட்டிடங்களில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கை

கிரென்பெல் டவர் அடுக்குமாடி கட்டட தீ விபத்தைத் தொடர்ந்து லண்டனில் உள்ள சுமார் 600 கட்டிடங்களில் பாதுகாப்பு சோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரென்பெல் கட்டடத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய உலோகப்பூச்சு பூசப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ...

மேலும்..

கென்சிங்டன் கவுன்சில் தலைமை நிர்வாகி ராஜினாமா

பேரழிவுகளை ஏற்படுத்திய கிரென்பெல் டவர் தீ விபத்து தொடர்பான விமர்சனங்களுக்கு மத்தியில் கென்சிங்டன் மற்றும் செல்சியா கவுன்சிலின் தலைமை நிர்வாகி நிக்கோலஸ் ஹொல்கேட் ராஜினாமா செய்துள்ளார். உள்ளூர் அரசாங்க செயலாளர் சஜித் ஜாவிட் பதவி விலகுமாறு தன்னை வலியுறுத்தியதாக நிக்கோலஸ் ஹொல்கேட் தெரிவித்துள்ள ...

மேலும்..

தாக்குதல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக லண்டன் சட்டமன்றத்தில் மௌன அஞ்சலி

கிரென்பெல் டவர் தீ விபத்து மற்றும் ஃபின்ஸ்பரி பார்க் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான லண்டன் சட்டமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. லண்டன் மேயர் சாதிக் கான் மௌன அஞ்சலிக்கான அறிவிப்பை வெளியிட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ...

மேலும்..

மகாராணியின் நாடாளுமன்ற உரை இன்று

பிரித்தானிய நாடாளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் வழக்கம் போன்று மகாராணி எலிசபெத் உரையாற்றவுள்ளார். அவருடை உரையில் பிரெக்சிற் விவகாரம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை உள்நாட்டு வன்முறைகள் மற்றும் கார் காப்பீட்டு விவகாரங்களும் உள்ளடக்கப்படும் என்றும் ...

மேலும்..

உத்தியோகபூர்வ பிரெக்சிற் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் வரலாற்று முக்கியத்துவமான பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் குறித்த பேச்சுவார்த்தைக்கு பிரெக்சிற் விடயங்களைக் கையாளும் அமைச்சர் டேவிட் டேவிஸ் தயாராக உள்ள நிலையில், இன்று ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் முறைப்படி ...

மேலும்..

வடக்கு லண்டன் தாக்குதல்: பிரதமர் மே கடும் கண்டனம்

வடக்கு லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) பாதசாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தோடு, இது போன்ற தருணத்தில் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதி: டேவிட் டேவிஸ்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என பிரித்தானிய பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்குகின்றேன் என்ற வகையில் கூறுகின்றேன். ...

மேலும்..

லண்டன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்சம் 30 பேரின் உயிர்களை காவுகொண்டதாக கூறப்படும் கிரென்பெல் டவர் கொடிய தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி லண்டனில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கென்சிங்டன், மத்திய லண்டன் வீதிகளிலும் டவுனிங் வீதியில்  அமைந்துள்ள பிரித்தானிய உள்துறை அமைச்சு அலுவலகத்திற்கு வெளியிலும், லண்டன், கென்சிங்டன் ...

மேலும்..