பிரித்தானியச் செய்திகள்

கல்வி தகைமையின்மையே பிரெக்சிற் தெரிவிற்கு காரணம்: ஆய்வு

பிரித்தானியர்கள் சிறந்த கல்வியை பெற்றிருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு சாதகமாக வாக்களித்திருக்க மாட்டார்கள் என பிரித்தானியாவின் புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், வாக்களித்தவர்களில் மூன்று வீதமானோர் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருப்பதை தெரிவுசெய்திருப்பார்கள் ...

மேலும்..

பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானியா குழப்பத்தில் உள்ளது: அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானியா சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளாது குழப்பமான நிலையில் உள்ளதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அலெக்சான்டர் டவுனர் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விடயம் தொடர்பில் பி.பி.சினால் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ...

மேலும்..

தூங்கினால் மரணம்: வினோதமான நோயால் அவதிப்படும் வாலிபர்

பிரித்தானிய நாட்டில் தூங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Gosport நகரில் வசித்து வரும் Liam Derbyshire(17) என்ற வாலிபரை தான் இந்த வினோதமான நோய் ...

மேலும்..

வெனிசுவேலா மீதான பொருளாதார தடைகள் சரியானதல்ல: தொழிற்கட்சி உறுப்பினர்

வெனிசுவேலா ஜனாதிபதி சர்வாதிகாரி என்று கூறி அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்காவின் செயற்பாடுகள் சரியானவை அல்ல என பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார். மேலும் வெனிசுவேலா அரசாங்கத்திற்கும் எதிர்தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை எளிதாக்க வேண்டும் என்றும் அவர் ...

மேலும்..

பிரித்தானிய முன்னாள் பிரதமரை விசாரிக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு

போர்க் குற்றம் தொடர்பான விசாரணைகளுக்கு பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் உட்படுத்தப்படக் கூடாது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியுடன் தொடர்புடைய போர்க் குற்ற விசாரணைகளில் பிளேயர் உட்படுத்தப்படக் கூடாது என நேற்றைய தினம் ...

மேலும்..

லண்டனில் கறுப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு!

லண்டனில் கடந்த மூன்று மாதங்களாக கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பெருநகர பொலிஸார் அதிகளவான மோதல்போக்கை கடைப்பிடித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 36 சதவீதமான கறுப்பினத்தவர்கள் அல்லது பிரித்தானியாவைச் சேர்ந்த கறுப்பினத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டன் ...

மேலும்..

எடின்பேர்க் கோமகன் கலந்துகொள்ளும் இறுதி உத்தியோகப்பூர்வ நிகழ்வு

எடின்பேர்க் கோமகன் பிலிப் அரச கடமைகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) தனது தலைமையிலான இறுதி உத்தியோகப்பூர்வ நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார். எனினும், எதிர்வரும் காலங்களில் எலிசபெத் மகாராணியின் தலைமையிலான உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளில் அவர் பங்குபற்றுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. பல தசாப்தங்களாக ...

மேலும்..

பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு: மூடப்படவுள்ளது ஜோன் ரட்கிளிப் வைத்தியசாலை

இங்கிலாந்து ஒக்ஸ்ஃபோர்ட்டில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகள் அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 12 மாதங்களுக்கு குறித்த வைத்தியசாலை  மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோன்  ரட்கிளிப் எனப்படும் குறித்த வைத்தியசாலையில் பூசப்பட்டிருந்த உலோகப் பூச்சு எளிதில் தீப்பிடித்து எரியக் கூடியது என தெரியவந்ததைத் ...

மேலும்..

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் கேள்வியெழுப்பிய வணிக தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகும் விவகாரம் தொடர்பில் வணிக தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தன்னிடம் கேள்வியெழுப்பியதாக பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

உலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் பிரித்தானியா அக்கறை

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகத் தீர்மானித்துள்ள நிலையில், பிரேசில் உட்பட ஏனைய உலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் பிரித்தானியா அக்கறை செலுத்தும் என பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் (Phillip Hammond) தெரிவித்துள்ளார். பிரேசில் தலைநகர் பிரசிலியாவுக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் ...

மேலும்..

ஸ்கொட்லாந்தில் பெஷன்டேல் நினைவு தினம் அனுஷ்டிப்பு

பெஷன்டேல் போர் நடைபெற்று தற்போது நூறு ஆண்டுகள் கடந்துள்ளதை நினைவுகூரும் வகையில் ஸ்கொட்லாந்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் இன்று (திங்கட்கிழமை) அணி திரண்டுள்ளனர். முதலாம் உலகப்போர் காலத்தில் நடைபெற்ற குறித்த போரில் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த எண்ணிலடங்கா வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். அந்த ...

மேலும்..

தடையற்ற சுதந்திர பெயர்வு முடிவுக்கு வரும்!

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான மக்களின் சுதந்திர பெயர்வு எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் என பிரித்தானிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய குடிவரவு அமைச்சர் பிரென்டன் லுயிஸ் (Brandon Lewis) குறித்த விடயம் தொடர்பில் பி.பி.சிக்கு ...

மேலும்..

150 பேரின் குடியுரிமை பிரித்தானியாவில் பறிபோகிறது!

பிரித்தானியாவில் இருந்து வெளியேறிய குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களின் குடியுரிமையை பறித்து அவர்கள் நாடு திரும்புவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. பிரித்தானியா அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் 150க்கும் மேற்பட்டோரின் குடியுரிமை பறிக்கப்படுகிறது. மட்டுமின்றி சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பயங்கரவாதிகளை திருமணம் ...

மேலும்..

ஆங்கிலத்தை தப்பாக பேசியதற்கு மரண தண்டனை தந்த 15 வயது சிறுவன்!!

போலந்து நாட்டை சேர்ந்த ஜொஸ்விக் என்பவர் தனது நண்பர்களுடன் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஹார்லோ நகருக்கு நண்பர்களுடன் ஷொப்பிங் சென்றுள்ளார். அப்போது, இவருடன் 15 வயது சிறுவன் ஒருவன் உரையாடியுள்ளார். இருவரும் நடந்து சென்றபோது சிறுவனிடம் போலந்து ...

மேலும்..

தென்சீன கடற்பகுதிக்கு விமானந்தாங்கி கப்பல்களை அனுப்ப பிரித்தானியா தீர்மானம்

சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதிக்கு இரண்டு விமானந்தாங்கி கப்பல்களை அனுப்புவதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் ஃபலோன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் உத்தியோகபூர்வ விஜயமாக அவுஸ்ரேலியா சென்றுள்ள நிலையில் ...

மேலும்..