பிரித்தானியச் செய்திகள்

விமான ஆம்புலன்ஸ் பைலட் வேலையில் இருந்து நீங்கும் பிரிட்டன் இளவரசர் வில்லியம்

பிரிட்டன் இளவரசரான வில்லியம் முழுநேர அரசகடமைகளை தொடர்வதற்காக தற்போது செய்துவரும் விமான ஆம்புலன்ஸ் பைலட் வேலையை இன்று கைவிட உள்ளார் லண்டன்: பிரிட்டன் மகாராணி எலிசபெத் கடந்த வருடம் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தனக்கு வயதாகிவிட்டதால் அரசகடமைகளை தன்னால் சரிவர நிறைவேற்ற முடியவில்லை ...

மேலும்..

பிரெக்சிற்றிற்கு பின்னரான குடியேற்றம் தொடர்பில் பிரித்தானியா அக்கறை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகியமையின் பின்னர், குடியேற்றம் தொடர்பில் எதிர்கொள்ள வேண்டிய செலவுகள் குறித்து பிரித்தானிய அரசாங்கம் அக்கறை செலுத்தி வருகின்றது. பிரெக்சிற்றிற்கு பின்னரான குடியேற்றம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவீனங்கள் மற்றும் அது தொடர்பான பரிசீலனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு ...

மேலும்..

உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் அமைப்பு

உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. ஸ்கொட்லாந்து கடலில் மிதந்துகொண்டிருக்கும் படகில் இந்த காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் மிக ஆழமாக விசையாழிகள் (turbines) பொருத்தப்பட்டுள்ளன. அவை கடல்நீரை சுழற்றும்போது காற்றாலையின் காற்றாடி சுழன்று அதன் சக்தியிலிருந்து மின்சாரம் உருவாக்கப்படுகின்றது. இதற்கு ...

மேலும்..

மனித உரிமை விடயத்தில் இலங்கை மீதான அழுத்தம் தொடரும்: பிரித்தானியா

மனித உரிமை விடயங்கள் தொடர்பில் இலங்கை மீது பிரித்தானியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் புதிய தலைவராக தெரிவிசெய்யப்பட்டுள்ள போல் ஸ்கலி தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நீடிப்பதாக தெரிவித்த அவர்,  இப்பிரச்சினையை ...

மேலும்..

இவ்வருட இறுதிக்குள் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்வாரா ட்ரம்ப்?

பிரதமர் மேயின் அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்னர் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வமற்ற விஜயம் ஒன்றை மேற்கொள்ள ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், இவ்வருட இறுதிக்கு முன்னர் அவர் பிரித்தானியாவில் தடம் பதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் ...

மேலும்..

பிரெக்சிற்றால் அமெரிக்க வர்த்தக உறவுகள் பாதிப்படையாது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் அதே சமயம், அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் பாதிப்படையாத வண்ணம் பிரித்தானியா செயலாற்றும் என சர்வதேச வர்த்தக செயலாளர் லியம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியில் நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க வர்த்தக செயலாளர் ரொபர்ட்டுடன் மேற்கொண்ட ...

மேலும்..

கொன்சர்வேற்றிவ் கட்சிக்குள் கருத்து முரண்பாடு: பொரிஸ் மறுப்பு

பிரெக்சிற் தொடர்பில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கருத்தை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் மறுத்துள்ளார். வெலிங்டனில் நியூசிலாந்து வெளியுறவுச் செயலாளருடன் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரெக்சிற் குறித்த ...

மேலும்..

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் லண்டனில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவு போராட்டம்

இன்றைய தினம் கறுப்பு ஜூலை நினைவெழுச்சி போராட்டம் லண்டனில் WESTMINSTER SW1A 2AA எனும் இடத்தில் மாலை 5.00 முதல் நடைபெற்றது.   இலங்கையில் 1983ம் ஆண்டில், கறுப்பு ஜூலை இனப் படுகொலைகள் இடம்பெற்று முப்பத்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. பல அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிட்ட ...

மேலும்..

உயிர் நீத்த நியூசிலாந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பொரிஸ்

நியூசிலாந்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன், முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த நியூசிலாந்து வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த  நிகழ்வின் போது அவர் புகியாஹூ தேசிய போர் நினைவுப் பூங்காவில் மலர்வளையம் அர்ப்பணித்து மரியாதையும் செலுத்தியுள்ளார். மேற்படி நிகழ்வில் உரையாற்றிய ...

மேலும்..

லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான பிரித்தானியர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான தகவல்களின் படி, சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலின் தேசியக் கொடியை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ...

மேலும்..

பொரிஸ் ஜோன்சனுக்கு ஹொங்கி முறையில் நியூசிலாந்தில் வரவேற்பு!

பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் இன்று (திங்கட்கிழமை) நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன் போது, மௌரி (Maori) என அழைக்கப்படும் நியூசிலாந்தில் உள்ள பழங்குடி மக்கள், பாரம்பரிய முறையில் அவருக்கு வரவேற்பளித்துள்ளனர். குறித்த வரவேற்பை ரசித்த பொரிஸ் ஜோன்சனை, நியூசிலாந்தின் சிவில் ...

மேலும்..

செல்போனில் படமெடுத்து சசிகலா வீடியோவை ரகசியமாக விற்கும் ‘சிறை’ கைதிகள்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அம்பலப்படுத்திய கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து ...

மேலும்..

தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா பாராளுமன்றில் கோரிக்கை!

பொதுத் தேர்தலின் பின்னான புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட "தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்" அமைப்பின் (APPGT)நிறைவேற்றுக் குழு தெரிவு கடந்த ஜூலை 18ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம் பெற்றது. தமிழர்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிருந்து அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வலுவானநிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டது. தலைவர் - Paul Scully மூத்த பிரதித் தலைவர் - Siobhain McDonagh பிரதித் தலைவர்கள் - Bob Blackman, Zac Goldsmith, Theresa Villiers, Joan Ryan, Wes Streeting, Ed Davey கௌரவ செயலாளர் - Tom Brake நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் - Mike Gapes, Virendra Sharma, Stephen Timms அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டு எடுக்க வேண்டிய நடடிக்கைகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழ் மக்களின் இனப் பிரச்சினை குறித்த ஓர் விவாதமொன்றைபாராளுமன்றில் நடாத்தும் கோரிக்கையை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது. அதனை ஒட்டி பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவுக்குவரும் வியாழக் கிழமை (20/07/2017) தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவர்   Paul Scully பாராளுமன்றில் பின்வரும்கோரிக்கையை முன் வைத்தார். "ஐ நா மனித உரிமைக் கழக சிறப்பு அறிக்கையாளர்(Special Rapporteur)  அண்மையில் தனது சிறிலங்காவிற்கான பயணத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் மனித உரிமைக் கழகத் தீர்மானத்தினை (301)அமுலாக்குவதிலுள்ள தாமதத்தினை சுட்டிக் காட்டியதுடன் அங்கு சித்திரவதைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாத ஐ நா கூட்டத் தொடரினை ஒட்டிய  இலையுதிர்கால பாரளுமன்றஅமர்வுகளின் போது சிறிலங்காவின் மனித உரிமைகள் பற்றிய ஒரு விவாதத்தினை நடத்துவோமா?" என்ற கோரிக்கையை பிரித்தானிய பாராளுமன்றில் முன் வைத்தார். தமிழர்களுக்கான அனைத்து  கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவில் இடம் பெறும் தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்புக்கெதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்வரும் காலத்தில்பாராளுமன்றிலும் அதிகார மையங்களிலும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க உள்ளனர். தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் செயலகமாக பிரித்தானிய தமிழர் பேரவை 2007ஆம்ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகின்றது. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இவ்வாறான ஒருங்கிணைந்த நடவடிக்கைளை முன்னெடுக்க தமது தார்மீக ஆதரவையும் செயல்பாட்டையும் வழங்க வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையுடன்வேண்டுகிறது.

மேலும்..

பிரெக்சிற் உடன்படிக்கைகள் குறித்து ஜெரமி கோர்பின் எச்சரிக்கை

வர்த்தக உடன்படிக்கை எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய வர்த்தக அமைப்பின் விதிகளை கன்சர்வேட்டிவ் அரசாங்கம் மீள்பரிசிலனை செய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ...

மேலும்..

நாட்டை மீட்டெடுக்க புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! –  சம்பந்தன் வலியுறுத்து (photos)

"இந்த நாட்டில் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசமைப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை. இதுவே நாட்டில் நிலவிய போருக்கு முக்கிய காரணம். ஆகவே, அவ்விதமான நிலைமையை முழுமையாக நீக்கிக்கொள்வதாக இருந்தால் புதியதொரு அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுக்க ...

மேலும்..