உலகச் செய்திகள்

தாதி தவறி விழுந்ததில் வைத்தியர் பலி

கொலம்பியாவில் காலி நகரில் உள்ள வைத்தியசாலையில் 6 ஆவது மாடியில் இருந்து தாதி தவறி விழுந்ததில் வைத்தியர் பலியாகியுள்ளார். டெல்வாலி பல்கலைக்கழக வைத்தியசாலையில் பயின்றுவந்த தாதி மரியா இசபெல் கான் சலேஷ், குறித்த வைத்தியசாலையில் 6 ஆவது மாடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது ...

மேலும்..

அமெரிக்க யுத்தக்கப்பல் – பிலிப்பைன்ஸ் கொள்கலன் கப்பல் மோதி விபத்து : 7 பேரைக்காணவில்லை

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூ.எஸ்.எஸ். பிற்ஸ்கிரல்ட் என்ற யுத்தக்கப்பலே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது 7 அமெரிக்க கடற்படைவீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்தானது யப்பானின் யொகுஷ்கா கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காணாமல்போக கடற்படையினரைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

அமெரிக்காவில் ஸ்ரீரடி சாய்பாபா திருத்தலம்!!!

அமெரிக்கா: அமெரிக்காவின் மசாசூட் மாநிலத்தில் ஸ்ரீ குருஸ்தான் என்று அழைக்கப்படும் ஸ்ரீரடி சாய்பாபாவின் திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோவில் வியாழக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் ...

மேலும்..

அதிபர் ட்ரம்பின் அழைப்பை ஏற்று வரும் 25-ந்தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி வரும் 25, 26-ந்தேதிகளில் அமெரிக்கா செல்கிறார். அங்கு அந்த நாட்டு அதிபரை சந்தித்து மோடி பேசவுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது பிரதமர்் ...

மேலும்..

கத்தாருக்கு அதிநவீன போர் விமானத்தை விற்கும் அமெரிக்கா..!

கத்தார் நாட்டிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் எதிர்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பிரிவினையை மேலும் பெரிதாக்கும் வகையில் அமெரிக்கா அதிநவீன எப்-15 போர் விமானத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விற்பனையின் மதிப்பு 12 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திப்பு எப்-15 ...

மேலும்..

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் திடீர் ‘கெடு’

            பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்புஷன் ஜாதவ் தண்டனை ரத்து செய்யக்கோரும் வழக்கில், செப்டம்பர் 13-ந்தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய இந்தியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனை இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பு‌ஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ...

மேலும்..

“காஷ்மீரில் தீவிரவாதிகள் ‘கொரில்லா’ தாக்குதல் – போலீசார் உள்பட 6 பேர் பலி”

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மறைந்திருந்து நடத்திய கொடூரld தாக்குதலில் காவல் துணை ஆய்வாளர் உள்பட 6 பேர் பலியாகினர். என்கவுன்ட்டர் ஜம்மு காஷ்மிரின் பிஜேபரா பகுதியில் 3 தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களை ராணுவத்தினர் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் அனைவரும் வீடு ஒன்றுக்குள் ...

மேலும்..

அரபு நாடுகளின் தடை!! கத்தாரில் இந்திய தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

இந்தியாவை சேர்ந்தவர் அஜித். இவர் எலெக்ட்ரிஷியன் வேலைக்காக கடந்த 7 மாதங்களுக்கு முன் கத்தார் சென்றார். இவர் தற்போது வருத்தப்படும் நிலையில் உள்ளார். இவரை போல் கத்தாரில் உள்ள பல வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. அவருக்கு வேலையை பற்றி மட்டும் ...

மேலும்..

வெனிசுவேலாவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்: மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களினால் பிளவுபட்டுள்ள வெனிசுவேலாவின் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. வெனிசுவேலாவின் வடமேற்கு நகரான மரகைபோவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் 21 வயதுடைய லூயிஸ் வேரா என்ற மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவனின் உயிரிழப்புடன் வெனிசுவேலா ...

மேலும்..

சீன பாலர் பாடசாலையருகே குண்டுவெடிப்பு: எட்டு பேர் உயிரிழப்பு

சீனாவில் பாலர் பாடசாலையொன்றின் அருகே இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், 65 பேர்வரை படுகாயமடைந்துள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜுஜோ பகுதியிலுள்ள பிரபல பாலர் பாடசாலையொன்றின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே நேற்று (வியாழக்கிழமை) மாலை ...

மேலும்..

ஒட்டுமொத்த தமிழர்களை கண்கலங்க வைத்த நவீனின் மரணம் ; கொலையின் உள்நோக்கம் என்ன?

மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புக்கிட் குளூக்கோர், ஜாலான் காக்கி புக்கிட் என்ற இடத்தில் உணவு வாங்க சென்றிருந்த நவினையும் அவருடைய நண்பர் பிரவினையும் ஐவர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்து தாக்கியது. குறித்த கும்பலில் நவின் படித்த பாடசாலையின் முன்னால் மாணவர்கள் ...

மேலும்..

சவுதி அரேபியாவுடனான முறிவு கட்டாரின் கடல்போக்குவரத்தை பெருமளவில் பாதிக்கவில்லை!

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் கட்டாருடனான போக்குவரத்து உறவுகளை துண்டித்துக் கொண்டமையால் கட்டார் ஹமாட் துறைமுகத்தில் பெருமளவு பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் கடந்த ...

மேலும்..

அகதிகள் எதிர்கொண்ட இன்னல்களுக்கு நிவாரணமாக 300 கோடி ரூபாய் தர ஆஸ்திரேலியா அரசு ஒப்புதல்.

  படகுகள் வழியே தஞ்சம் கோரி  ஆஸ்திரேலியாவுக்குச்சென்ற சுமார் இரண்டாயிரம் அகதிகளை பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ் தீவில் அந்நாட்டு அரசு பல ஆண்டுகளாக தடுத்து வைத்திருக்கிறது. இந்த அகதிகள் தடுப்பில் இருந்த போது எதிர்கொண்ட இன்னல்களுக்கு நிவாரணமாக 53 மில்லியன் ...

மேலும்..

கிரீக் தீவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : ஒருவர் பலி

கிரீக் தீவில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் கிரீக் தீவு கூட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக, துருக்கியின் மேற்கு பகுதியிலுள்ள ...

மேலும்..

ட்ரம்பின் பயணத்தடை உச்ச நீதிமன்றத்தில் வெற்றிபெறும்: வெள்ளை மாளிகை

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளை சேர்ந்த மக்கள், அமெரிக்காவிற்கு பயணிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட தடை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் உறுதிசெய்யப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் பயணத்தடை மீதான இடைக்கால தடையை கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ...

மேலும்..