உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான "ரிங் ஆப் பயர்" மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ...

மேலும்..

நெருப்போடு விளையாடாதீர்கள் – உலக நாடுகளை எச்சரிக்கும் சீனா

தைவான் சீனாவின் சிறப்பு பிராந்தியம் என சீனா சொல்லிவரும் நிலையில், தைவானோ தன்னை தனிநாடு என்று கூறி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தைவான் தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில் தைவானை அச்சுறுத்தும் விதமாக சீனா தொடர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ...

மேலும்..

இந்தியாவின் AMBRONOL, DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்

  இந்தியாவின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான AMBRONOL, DOK-1 Max ஆகியனவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிறுவனத் தயாரிப்புகள் தர நிர்ணயக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்று கூறியுள்ளது. இன்றைய திகதி ...

மேலும்..

கணினி கட்டமைப்பில் கோளாறு- அமெரிக்காவில் 5,400 விமானங்கள் தாமதம்

  அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கணினி கட்டமைப்பில் நேற்று திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.கணினி கட்டமைப்பில் கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்களை அவசரமாக ...

மேலும்..

கின்னஸ் சாதனைப் படைத்த எலான் மஸ்க்: சோகமான சாதனையின் பின்னணி

உலகப்பணக்காரர்களில் ஒருவராகவும் டுவிட்டரின் தலைமை அதிகாரியாகவும் இருந்த எலான் மஸ்க்கிற்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது. எதற்காகத் தெரியுமா? பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்காண மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் ...

மேலும்..

சீனாவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் கண்டனம்!

அதிகளவான கொவிட்-19 பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் சீனா, அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த தீர்மானங்கள் ஏனைய நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. கொவிட்-19 தொற்று ...

மேலும்..

சர்வதேச போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்ற ஈரான் வீராங்கனை! விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை சாரா காதெம், நாடு திரும்பக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில், மஹ்சா அமினி மரணத்தை தொடர்ந்து ஹிஜாப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கஜகஸ்தானில் நடைபெற்ற செஸ் போட்டியில் வீராங்கனை ...

மேலும்..

ரஷ்ய வீரர்களின் தொலைபேசி சிக்னல் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்திய உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய இராணுவ நடவடிக்கை 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய படைகள் கைப்பற்றிய மகீவ்கா பகுதியில் ரஷ்ய வீரர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.   அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது ...

மேலும்..

பிரித்தானிய கல்வி திட்டத்தில் மாற்றம் – ரிஷி சுனக் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தினை கட்டாயப்படுத்தும் திட்டத்தை  பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இந்த முயற்சியானது எண்ணற்ற தன்மையை சமாளிக்கவும், இளைஞர்களை பணியிடத்திற்கு சிறப்பாக சித்தப்படுத்தவும் முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் முதல் உரையில், சுனக் ...

மேலும்..

50 வயதில் 60வது குழந்தை! இந்த வயதில் இது தேவையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பாகிஸ்தானை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் ஜான் முகமது கான் கில்ஜி, மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 59 ...

மேலும்..

80 இலட்சம் ரூபாய் செலவு செய்து ஓநாயாக மாறிய இளைஞன்!

ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர் அதிகளவில் பணம் செலவு செய்து ஓநாயாக மாறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜப்பானை சேர்ந்த இளைஞன் ஆடை அலங்கார நிபுணர் ஒருவரை அணுகி ஓநாயாக மாறுவதற்கான தனது ஆசையை வெளிப்படுத்தினார். ஆடை அலங்கார நிபுணர் அதிகமாகச் செலவு ஆகும் ...

மேலும்..

தென் கொரியாவும் அமெரிக்காவும் அணு ஆயுதப் போர் ஒத்திகைக்கு தயார்!

அணு ஆயுதஙகள் தொடர்பான போர் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு தென் கொரியாவும் அமெரிக்க கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய் வெளியிட்டுள்ளன. வடகொரியா தொடர்ந்து பல அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து வருவதே இதற்கா காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா ...

மேலும்..

பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூலா டா சில்வா பதவியேற்பு

பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) நேற்று பதவியேற்றார். பிரசேலில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. குறித்த தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சியின் வேட்பாளர், ...

மேலும்..

600 ஆண்டுகளில் முதல் முறையாக.. பதவியை துறந்த ஜேர்மனியின் போப் ஆண்டவர் மறைவு

கடந்த 2005ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்றவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். தனது இயற்பெயரை 16ஆம் பெனடிக்ட் என மாற்றிக்கொண்டார். 2013ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்த பெனடிக்ட், வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் தனது பதவியை துறந்தார். போப் ஆண்டவர் ...

மேலும்..

சீனாவிலிருந்து கனடா வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

சீனாவிலிருந்து கடாவிற்கு வருகை தரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து கனடா வரும் பயணிகள் கோவிட் பரிசோதனை செய்து கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் நெகடிவ் அறிக்கை காணப்படும் பயணிகளுக்கு மட்டுமே கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.   கனேடிய அரசாங்கம் ...

மேலும்..