December 1, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கள்ள நோட்டுக்களுடன் இருவர் கைது.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை இறக்கக்கண்டி பகுதியில் ஆயிரம் ருபாய் கள்ள நோட்டுக்களுடன் இரண்டு பேரை நேற்று (01) மாலை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள்  தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஐனுஷன் தெரிவித்தார். நிலாவெளி கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து இறக்கக்கண்டியில் சந்தேக நபரை ...

மேலும்..

அம்பந்தோட்டைத் துறைமுக ஊழியகளின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின்; கடமை – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.

  அம்பந்தோட்டை துறைமுக ஊளியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று அவர் தலதாமாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு அஸகிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை பிக்குகளை சந்தித்து ஆசிகளை ...

மேலும்..

எல்லோரும் முக்கியம் எனும் தொனிப்பொருளில் விழிப்ணர்வு ஊர்வலம்

உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. ஆந்த வகையில் இன்று வவுனியாவிலும் இச்செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலுறவு நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் எல்லோரும் முக்கியம் எனும் தொனிப்பொருளில் விழிப்ணர்வு ஊர்வலம் வவுனியாவில் இடம்பெற்றது. பாலுறவு நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு ...

மேலும்..

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலை விழாவும்  மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வும்(photo)

பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியில் 01.12.2017  வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு  முன்பள்ளியின்  முகாமைத்துவக்குழு தலைவர் திரு.ப.ரவிசங்கர்  அவர்களின் தலைமையில் நிகழ்வுகள்  சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு செந்தில்நாதன் மயூரன் வவுனியா நகரசபையின் முன்னாள் உப ...

மேலும்..

சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்கள பிராந்திய காரியாலயம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பிரிவுக்குட்பட்ட சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்கள பிராந்திய காரியாலயம்,சமுதாயஞ் சார் சீர்திருத்த திணைக்கள உதவி  ஆணையாளர் செல்வி சுஸாந்தி ஜெயசிங்ஹவினாலும் உள்ளக நூலகம் எம்.பீ்.டீ.லீயொனல் குணதிலக்கவினாலும் மட்டக்களப்பில் திறந்து  வைக்கப்பட்டது. சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்கள பெயர்ப் பலகை அதிதிகளினால் திரை நீக்கம் ...

மேலும்..

சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயன்பட கூடிய சிறந்த தலைவர்களை தெரிவு செய்யுங்கள்!

சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயன்பட கூடிய சிறந்த தலைவர்களை தெரிவு செய்யுங்கள்! தேசிய காங்கிரஸ் மகளிர் தலைவியின் மீலாத் வாழ்த்து ஒரு பூரண மனிதனுக்கு உரித்தான அனைத்து ஆளுமைகளும் ஒருங்கு சேர வாய்க்க பெற்றவராக விளங்கிய இறை தூதர் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் ...

மேலும்..

தனியார் ஒருவரின் அணைக்கட்டால் கிராம  மக்கள்  பாதிப்பு 

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் உள்ள சித்தப்பா கடைச்சந்திக்கு முன்னால் உள்ள   கழிவு வாய்க்காலை தனியார் ஒருவர் மண்மூடைகள் கொண்டு  மறித்ததனால் வெள்ளநீர் சுமார் ஆறு அடிவரை தேங்கி வீதிக்கும் மக்கள் குடியிருப்புக்கும் சென்றதனால் கிராம மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருந்தனர்  இதனைத் ...

மேலும்..

வவுனியாவில் ஹாட்வெயார் தீயில் எரிந்து முற்றாக நாசம்: தீ அணைப்புப் படை மந்தச் செயற்பாடு

வவுனியா - மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹாட்வெயார் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த இடத்திற்கு தீயணைப்பு பிரிவின் வாகனம் ஒன்று ...

மேலும்..

யானைக் கூட்டணி சாத்தியமா? – ஞாயிறன்று வரும் இறுதி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ள பங்காளிக்கட்சிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது. 2018 ஜனவரி இறுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் முழுவீச்சுடன் செயற்பட்டுவருகின்றன. ஒருசில கட்சிகள் கட்டுப்பணத்தைக்கூட ...

மேலும்..

தாஜுதீனின் அலைபேசி ஆராயப்படுகிறது!

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் அலைபேசி மற்றும் அழைப்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்றும் அவ்விசாரணைகளுக்கான மேலதிக காலஅவகாசம் தேவைப்படுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தார். இந்த வழக்கு, கொழும்பு ...

மேலும்..

முட்கள் நிறைந்த பாதையிலேயே நானும், ஜனாதிபதியும் பயணம்!

முட்கள் நிறைந்த பாதையிலேயே நானும், ஜனாதிபதியும் பயணம்! - முரண்பாடுகள் இல்லை என்கிறார் பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தனக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகிவரும் தகவல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்தார். "புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக நானும் ஜனாதிபதியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம். ...

மேலும்..

பிரதமர் – கூட்டமைப்பு – தேரர்கள் அலரிமாளிகையில் அவசர சந்திப்பு  

அரசியலமைப்புக்கான இறுதி வரைபை விரைவில் தயாரிப்பது எனத் தீர்மானம்  புதிய அரசியலமைப்பு  மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்  இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்களுக்குமிடையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் அவசர சந்திப்பு ...

மேலும்..

 மன்னார் வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தினுள் காட்டு யானைகளின் அட்டகாசம்.

 மன்னார் வெள்ளாங்குளம் 'சேவா' கிராமத்தினுள் காட்டு யானைகளின் அட்டகாசம்- பாதீப்பை எதிர்கொள்ளும் கிராம மக்கள்-(படம்)  மன்னார் நிருபர்   (01-12-2017) மன்னார்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுவுக்குற்பட்ட   வெள்ளாங்குளம் 'சேவா' கிராமத்தினுள் நேற்று வியாழக்கிழமை(30) இரவு காட்டு யானைகள் குறித்த கிராமத்தினுள் உற் புகுந்து விவசாயம் மற்றும் ...

மேலும்..

பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி.

(க.கிஷாந்தன்) டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் 30.11.2017 அன்று மாலை பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 86 வயதுடைய மூக்கன் மருதாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டி வீட்டில் ...

மேலும்..

கிளிநொச்சயில் ஓரளவிலான சீரான காலநிலை நிலவி வருகின்றது .

கிளிநொச்சயில் ஓரளவிலான சீரான காலநிலை நிலவி வருகின்றது. இரண்டு நாட்கள் பெய்த மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மிக பெரிய நீர்பாசண குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் நேரத்திற்கு நேரம் அதிகரித்து வருகின்றது. அவ்வப்போது மழை பெய்து வருவதுடன், இருளுடனான ...

மேலும்..

புதிய குடியிருப்புகளை அமைத்து எம்மை தங்க வைக்க வேண்டும் – நோர்வூடில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) நோர்வூட் பகுதியில் 30.11.2017 அன்று பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்டு நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 81 குடும்பங்களை சேர்ந்த 360 பேர் பாதுகாப்பு கருதி தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்காளக பெய்த மழை காரணமாக தமது இருப்பிடங்களில் வெள்ள ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 02.11.2017

மேஷம் மேஷம்: இன்றும் மாலை 4.40 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பரணி நட்சத்திரக்காரர் களுக்கு வீண் டென்ஷன் வந்து போகும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். ...

மேலும்..

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்: நெல்லையில்!

நெல்லையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 3 பேர் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று ...

மேலும்..

மீள முடியாத படுகுழிக்குள் இலங்கையின் பொருளாதாரம்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளிடமிருந்து கடனாகப் பெற்ற மூன்று லட்சம் கோடி ரூபாவைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாகத் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். எமது நாடு எந்த அளவுக்குக் கடன் சுமையில் உள்ளது என்பதை பிரதமரின் இந்தக் கூற்று தெளிவாகப் புலப்படுத்துகிறது. இலங்கை போன்றதொரு ...

மேலும்..

சேதமடைந்த நாணயத்தாள்களை டிசம்பர் மாதத்தின் பின்னர் பயன்படுத்த தடை

திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நாணயத்தாள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் இவ்வாறான நாணயத்தாளின் மூலம் எந்தவொரு வங்கியிலும் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சேதப்படுத்தப்படும் நாணயம் தொடர்பில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக நாணய ...

மேலும்..

முருகனுக்குரிய திருக்கார்த்திகை விரதத்தின் சிறப்பு…!

திருக்கார்த்திகை குமரனுக்கு மிக மிக முக்கியமானது. இதற்கு அடுத்த நிலையை ஆடிக்கிருத்திகை பெறும். இவ்விரதத்தை  மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி 12 ஆண்டுகள் இந்த விரதமிருந்து எல்லா முனிவர்களிலும்  மேலாக எல்லா உலகமும் சுற்று வரும் வரம் பெற்றார்.  இவ்விரதநாளில் ...

மேலும்..

அம்பந்தோட்டைத் துறைமுக ஊழியகளின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின்; கடமை – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.

  அம்பந்தோட்டை துறைமுக ஊளியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று அவர் தலதாமாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு அஸகிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை பிக்குகளை சந்தித்து ஆசிகளை ...

மேலும்..

கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன்?

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத  புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.    தமிழர்கள் ...

மேலும்..

பிரபாகரன் மனைவி மதிவதனியின் பெயரில் நயன்தாராவா??

கடந்த வாரம் அறம், இப்படை வெல்லும், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்கள் வெளியானது. தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் நயன்தாராவின் அறம் படம் சென்னையில் மட்டும் ரூ. 1 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா நடிப்பில் ...

மேலும்..

ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து இன்று (25) முற்பகல் நாடு திரும்பினார். ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன ...

மேலும்..

கிழக்கிலங்கையில் அனுராதபுர யுகத்திற்குரிய தொல் பொருட்கள் கண்டுபிடிப்பு

கிழக்கிலங்கையில் அனுராதபுர யுகத்திற்குரிய தொல் பொருட்கள் கண்டுபிடிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி தலவாய்கண்டம் என்ற இடத்தில் தொல்பொருள் திணைக்களம் நடத்திய ஆய்வில் அனுராதபுர யுகத்திற்குரிய தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. பன்குடாவெளி தொல்பொருள் பூமியில் 23 இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், செங்கல் மதில், பழைய செங்கல் ...

மேலும்..

இந்த ஒரு இடத்தில் அழுத்தம் கொடுங்கள்: ஒரு நிமிடத்தில் மாற்றம்

அக்குபிரஷர் எனும் சைனீஸ் மருத்துவமானது நம் உடலில் பல்வேறு உறுப்புக்களுடன் தொடர்பு கொண்டுள்ள அழுத்தப் புள்ளிகளை கண்டறிந்து அந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கும் ஒரு சிகிச்சை முறையாகும். பழங்காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ள இந்த சிகிச்சை முறை பல நோய்களை குணமாக்க உதவுகிறது. LV3 ...

மேலும்..

பெற்ற குழந்தையை இரக்கமின்றி கொலை செய்த தாய்: அதிர்ச்சி காரணம்

பெற்ற குழந்தையை இரக்கமின்றி கொலை செய்த தாய்: அதிர்ச்சி காரணம் அர்ஜென்டினாவில் இரண்டு வயது குழந்தையை கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜண்டினாவின் ப்ளோரின்சியோ வரீலா நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. கரீனா கோமீஸ் (26) என்ற பெண் தனது பெண் குழந்தை ...

மேலும்..

கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் நாளைய தினம் திருக்கார்த்திகை விளக்கீடு

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் வருடாந்த திருக்கார்த்திகை விளக்கீடு நாளைய தினம் மாலை நடைபெறவுள்ளது. கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு நாளை விசேட பூஜை மற்றும் விசேட பெரஹராவிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதேபோல கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு நாடெங்கிலுமிருந்து அடியார்கள் கதிர்காமம் செல்வது வழக்கம் ...

மேலும்..

அடையாளம் தெரியாத நபரால் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச் சூடு

அடையாளம் தெரியாத நபரொருவரால் கொட்டாவ - பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றை தினம் இரவு பாலிகா வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதான இரு பிள்ளைகளின் தாயொருவர் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், ...

மேலும்..

சவுதியில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கொலை மற்றும் போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இதில் ஆறு பேர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்கள். இவர்கள் ஒரு குழுவாக ...

மேலும்..

பெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இருக்குமாம்

ஜோதிடத்தில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். ஜனவரி ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம், லட்சியங்கள் நிறைய கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விடயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் இவர்கள், தங்கள் உணர்வை வெளிப்படையாக கூற ...

மேலும்..

கணவர் இறந்ததாக நாடகமாடிய மனைவி: ஏழு ஆண்டுகளாக அரசை ஏமாற்றியது அம்பலம்

கணவர் இறந்ததாக நாடகமாடிய மனைவி: ஏழு ஆண்டுகளாக அரசை ஏமாற்றியது அம்பலம் இங்கிலாந்தில் கணவன் இறந்து விட்டதாக கூறி அரசிடம் போலியாக நிதியுதவி பெற்று வந்த பெண் சிக்கியுள்ளார். இங்கிலாந்தின் Derbyshire-ல் வசித்து வரும் பெண் Georgina Vinall(42), ஏழு குழந்தைகளுக்கு தாயான இவர் ...

மேலும்..

ஈரானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈரானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஈரானின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் கூறுகையில், ‘ஈரானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக ...

மேலும்..

கடலில் குளித்த வெளிநாட்டு இளைஞன் மாயம்

பலப்பிட்டிய கடலில் குளித்த உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜோடி அலையில் சிக்கிய நிலையில், அலையில் சிக்கிய ஆண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர். கடலில் மூழ்கிய பெண்ணை பிரதேசவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், காணாமல் போயுள்ள ...

மேலும்..

நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் தாழிறக்கம் – எட்டு வீடுகள் சேதம் – 8 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் பாதிப்பு.

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி தோட்டப்பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டதில் அப்பிரதேசத்தில் உள்ள எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வீடுகளில் வசித்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட  47 பேர் சென். ஜோன் டிலரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க ...

மேலும்..

டிரம்ப் செய்தது தவறுதான்: பிரதமர் தெரேசா மே

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் வலதுசாரி வீடியோக்களை பகிர்ந்தது தவறு தான் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரிட்டன் வலதுசாரி தலைவரான ப்ரான்சென் பதிவிட்ட இஸ்லாமிய வன்முறையாளர்கள் வீடியோவை டிரம்ப் ரீடுவிட் செய்திருந்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதியே இவ்வாறு நடப்பது அழகல்ல ...

மேலும்..

யாழில் பெண் ஊடகப் பணியாளர் கிணற்றில் சடலமாக மீட்பு..!!

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ...

மேலும்..

குடியுரிமையை வாரி வழங்கும் கனடா அரசு: 10லட்சம் பேருக்கு குடியுரிமை!

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமையினை வாரி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, போன்ற நாடுகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை பின்தள்ளியுள்ள நிலையில். கனடா அரசு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதோடு அடுத்த மூன்று ...

மேலும்..

நிவாரணப்பணிகளை முடுக்கி விடுக – வைகோ வேண்டுகோள்.!

தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று மதியம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘ஓகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ...

மேலும்..

தத்தெடுத்த பெற்றோர்களால் சித்திரைவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் தத்து எடுத்த சிறுமி ஷெரின் இறப்பதற்கு முன் பல சித்திரவதைகளுக்கு உள்ளானதாக வைத்தியர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் வசிக்கும் குறித்த தம்பதியினர் ஷெரின் என்ற சிறுமியை தத்து எடுத்து வளர்த்து வந்த ...

மேலும்..

அமெரிக்காவில் முதல் முறையாக சீக்கிய மதத்தை சேர்ந்த பெண் மேயர்

அமெரிக்காவில் முதல் முறையாக சீக்கிய மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யுபா நகரில் கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சீக்கிய மதத்தை சேர்ந்த பெண் பிரீத் டிட்பால் துணை மேயராக ...

மேலும்..

யாழில் ஹெரோய்ன் டொபி : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட புத்திகபத்திரண!

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திகபத்திரண, யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன்டொபி  வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் கலந்த ...

மேலும்..

நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

(க.கிஷாந்தன்) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மலையகத்திலும் அசாதாரண காலநிலையின் தாக்கம் பெரிதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடுமையான மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் ...

மேலும்..

பாதிக்கப்பட்டுள்ள விவசாய காணிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நிரம்பிய வெள்ள நீர் வற்றி வருகின்றது.

(க.கிஷாந்தன்) நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பிரதேசங்கள் வாரியாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தில் டயகம பிரதேசம் தலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்து வந்த அடை மழை காரணமாக பாதிப்புக்குள்ளான ...

மேலும்..

சுவிஸில் பதுங்கியுள்ள சன்னா ‘இன்ரபோல்’ மூலம் கைதாவார்; யாழ்.பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவிப்பு.

சுவிற்சர்லாந்தில் பதுங்கியுள்ள வாள்வெட்டுக்குழுவின் தலைவர்களில் ஒருவரான சன்னா என்பவரைச் சர்வதேசப் பொலிஸாரின் (இன்ரபோல்) உதவியுடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- "யாழ். குடாநாட்டிலும், கொழும்பு, வவுனியா பகுதிகளிலும் கைதான வாள்வெட்டுச் சந்தேகநபர்களிடம் வாள்கள், ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்………

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நேற்று(29) பிற்பகல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இப்பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டனர். பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனை அவமதிக்கும் வகையில் இணையத்தளமொன்றினூடாக வெளியிடப்பட்ட செய்தி மற்றும் அதனை தொடர்ந்து முகநூலில் இடம்பெற்றுவரும் ...

மேலும்..

ஏழாலை பாரதி முன்பள்ளியின் ஒளிவிழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

ஏழாலை பாரதி முன்பள்ளியின் வருடாந்த ஒளிவிழாவும்,பரிசளிப்பு விழாவும் இன்று 01.12.2017 வெள்ளிக்கிழமை காலை 09மணியளவில் முன்பள்ளி முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், அமெரிக்கமிஷன் திருச்சபையின் வணக்கத்துக்குரிய மைனசீலன் அடிகளாரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் சிறார்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், விருந்தினர்களால் ...

மேலும்..

மீண்டும் முடங்கியது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப், கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக மீண்டும் இன்று (டிசம்பர் 1) சில நிமிடங்களுக்கு முடங்கியது. மெக்ஸிகோ, கலிபோர்னியா, தெற்கு பிரேசில், ஐரோப்பாவின் பல பகுதிகள் மற்றும் பிரிட்டனில், இதன் பாதிப்பு அதிகமாக உணரப்பட்டது. இந்த குறிப்பிட்ட சில நிமிடங்களில், வாட்ஸ்அப்பில், ...

மேலும்..

இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அடுத்த அதிரடி முடிவு;

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தொடர்ந்தும் கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டிற்கு மேற்கு பகுதியில் அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் கொழும்பிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டல திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ...

மேலும்..

3வது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணியின் துணை கேப்டன் திரிமன்னே நீக்கம்.

டெல்லியில் நாளை தொடங்க உள்ள 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணியின் துணை கேப்டன் திரிமன்னே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் மழையால் டிரா ஆன நிலையில், நாக்பூரில் ...

மேலும்..

1 பில்லியன் டொலர்கள் செலவில் பிரத்தியேக தீம் பார்க்

சீனாவில் 1 பில்லியன் டொலர்கள் செலவில் பிரத்தியேக வெர்ச்சுவல் ரியாலிட்டி தீம் பார்க் உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவின் கியுஸூ மாகாணத்தில் 330 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெரும் அளவிற்கு உருவாக்கப்பட்டு வருகிறது. விண்வெளியில் பறப்பது, ஏலியன்கள் மற்றும் டிராகன்களுடன் விளையாடுவது, ...

மேலும்..

11 வது ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் (பிசிசிஐ) நடத்தப்பட்டு வரும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) டி20 கிரிக்கெட் லீக் உலகளவில பிரபலம் அடைந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இந்த வருடத்துடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. அடுத்த ஆண்டு ...

மேலும்..

வித்தியாவுக்கு கிடைத்த நீதி, விஜிக்கும் கிடைக்க வேண்டும்; மட்டக்களப்பில் மக்கள் வேண்டுகோள் !

  ஈழத் தமிழர் வரலாற்றில் ஆயுதமேந்திய தமிழ்க் குழுவொன்றினால் முதன் முதலாக கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட மாணவியின் 27 வது ஆண்டு நினைவு நாளான இன்று அவரது மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக ஆரையம்பதி சம்பவம் இடம்பெற்ற ஆற்றங்கரையில் , ...

மேலும்..

வவுனியாவில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் கடூழிய சிறை!!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 9 வயதுடைய சிறுமியினை பாலியல் வன்புணர்வு புரிந்த குற்றத்திற்காக 31 வயது நிரம்பிய நபரிற்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று (30.11.2017) விதிக்கப்பட்டிருகின்றது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. 2009ம் ஆண்டு 07ம் மாதம் 14ம் திகதி ...

மேலும்..

“காலைக்கதிர்” பத்திரிகையின் முன்னாள் பணியாளர் கிணற்றில்சடலமாக மீட்பு!

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது வேலணையில் வசித்து வந்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி(வயது 32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில் தோட்டக்காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ...

மேலும்..

பள்ளியில் 88 மாணவியரின் ஆடைகளை அகற்றி நிற்க வைத்த தண்டனை கொடுத்த கொடூரம்.

இடாநகர்: அருணாச்சலில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியரை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி, 88 மாணவியரின் ஆடைகளை அகற்றி, அவர்களை, சக மாணவர்கள் முன், நீண்ட நேரம் நிற்க வைத்து, தண்டனை கொடுத்த கொடூரம் நடந்து உள்ளது. விமர்சனம்: அருணாச்சல பிரதேசத்தில், பபும் பாரே மாவட்டத்தில், ...

மேலும்..

காரைதீவு இ.கி.ச பெண்கள் பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு.

செய்திகள்-ப.சஜிந்தன் காரைதீவு இ.கி.ச பெண்கள் பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு  நிகழ்வு கல்லூரியின் தலைவர் திரு.எஸ்.மணிமாறன் தலைமையில் இன்று(01.12.2017) காலை  சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக கௌரவ. பைசால் காசிம் அவர்களும் ,கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் திரு.அப்துல் ஜலீல் அவர்களும், ...

மேலும்..

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்த விக்ரம்.

தன் மகள் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தது, மகனை கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியது என, இரட்டிப்பு சந்தோஷத்துடன் வலம் வருகிறார், விக்ரம். 'இரண்டு பெரிய விஷயங்களும், அடுத்தடுத்து அரங்கேறியிருப்பது, ரொம்ப நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் உள்ளது' என்கிறார், அவர். மகளின் திருமண விஷயத்தில், 'பிசி'யாக இருந்த ...

மேலும்..

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி.

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டகொடை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பகுதியிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் புஸ்ஸல்லாவ பகுதியிலிருந்து தலவாக்கலை ...

மேலும்..

யாழில் பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

யாழில் பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையைச் சேர்ந்த இவர் ...

மேலும்..

அனர்த்தம் ஏற்பட்டால் உடனே அழையுங்கள்

நாட்டில் சீரற்ற வானிலை தொடர்வதனால் அனர்த்தம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே அனர்த்தம் ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பில் அறிவிக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் அவசர தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது. அனர்த்தம் ஏற்பட்டால் உடனே 1902 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு ...

மேலும்..

இலங்கையின் மலையகத்தில் கனமழையின் கோரதாண்டவம்

இலங்கையின் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் புயல் காற்று மற்றும் மழை வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை புகைப்படங்களாக வழங்குகிறோம்.

மேலும்..

எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி

லங்கை உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு மனுதாரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (30) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்கான ...

மேலும்..

முப்படையினரும் தயார் நிலையில் : இராணுவ ஊடகப் பேச்சாளர் திட்டவட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீறற்ற காலநிலையினைக் கருத்திற்கொண்டு, அனர்த்தத்தின் பின்னரான மீட்பு நடவடிக்கைகளுக்கும் நிவாரணப்பணிகளுக்கும் நாட்டின் முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடெங்கிலும் இயற்கைச் சீரின்மையால் நிகழத்தக்க அனர்த்தங்களின்போதான மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் ...

மேலும்..

தலவாக்கலை வட்டகொடையில் விபத்து ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!

தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதுண்டதில் மோட்டர் சைக்கிளை செலுத்தியவர் ஸ்தலத்திலே பலியானதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து சம்பவம் இன்று(01) காலை இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா நோக்கி ...

மேலும்..

மீண்டும் ஒரு மோசமான புயல் தாக்கும் அபாயம்! -அந்தமான் கடலில் மாற்றம்

கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உருவாகிய ‘ஒகி’ புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பாரிய புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ‘ஒகி’ புயலாக உருமாறியது, இதனால் கன்யாகுமரி ...

மேலும்..

தமிழகம், கேரளாவில் இன்றும் மழை கொட்டும்

தமிழகம் மற்றும் கேரளாவில் இன்றும்(டிச.,01) கனமழை கொட்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறியதால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, கடலுார் மாவட்டங்களில், மிக கன மழை பெய்து வருகிறது. இன்றும், ராமநாதபுரம் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில், ...

மேலும்..

ஸ்மார்ட்போன் பேட்டரி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

15 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போன் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய தொழில்நுட்பத்தினை சம்சுங் நிறுவனமானது கண்டுபிடித்துள்ளது. வழக்கமாக உருவாக்கப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளில் கிராபைன் எனப்படும் பொருளை கொண்டு உருவாக்கப்படும் புதியவகை பேட்ரிகளை மிகக்குறைவான நேரத்தில் சார்ஜ் செய்துகொள்ள முடியும் என சம்சுங் தெரிவித்துள்ளது. நீடிக்கப்பட்ட ...

மேலும்..

அஷ்டமி, நவமி என்றால் என்ன?

ஷ்டமி, நவமி என்றால் என்ன?சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ...

மேலும்..

ஸ்தம்பிதம் அடைந்தது இலங்கை! பொலிஸாரின் விடுமுறை இரத்து!

நாட்டில் நிலவிவரும் சீரற்றகாலநிலையின் காரணமாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகளை இரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பதில் பொலிஸ்மா அதிபர் டீ.வி. விக்ரமசிங்கவிற்கு உத்தவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கடுமையான மழை மற்றும் காற்றின் சீற்றம் ...

மேலும்..

வடக்கில் அதிகரிக்கும் எயிட்ஸ் நோயாளிகள்!

வடக்கில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய்கள் தொடர்பான விஷேட மருத்துவர் பிரியந்த பட்டகல தெரிவித்துள்ளார். யாழ். மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சர்வதேச எயிட்ஸ் தினத்தினை ...

மேலும்..

தொடரும் மழைவீழ்ச்சி: அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு!

நாட்டில் மழைவீழ்ச்சி குறைந்து காலநிலை இயல்பிற்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் தற்பொழுதும் இலங்கையின் பல பகுதிகளில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது. தொடர் மழைவீழ்ச்சி காரணமாக நில்வளா, கிங் மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ...

மேலும்..

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி!

கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர். இவர்களின் நாடு கடத்தலை ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

பாறுக் ஷிஹான் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுடன் இணைந்து எமது நாட்டு முஸ்லிம் மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்  இந்த நாள்  நாகரிக ...

மேலும்..

காவத்தமுனை தாருல் றஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவி 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலாமிடம்

காவத்தமுனை தாருல் றஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவி 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலாமிடம் மாற்றுத் திறனாளிகளுக்கான 2017ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் பரா விளையாட்டுப் போட்டி 05.08.2017 மற்றும் 06.08.2017ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது கோறளைப்பற்று மேற்கு பிரதேச ...

மேலும்..