தெற்காசிய பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் பரிசளிப்பும்

மார்க்கம் நகரசபையின் முழு ஆதரவுடன், தமிழ் கனேடிய விளையாட்டு சங்கம் பெருமையுடன் நாடாத்தும், தெற்காசிய பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2015 நிகழ்வு பங்குனி மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை Markham Pan Am Center இல் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்ச்சி காலை 9.00 மணிக்கு மார்க்கம் 7ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

பரிசளிப்பு விழா மலை 3.00 மணிக்கு ஆரம்பமாகும். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மார்க்கம் நகரபிதா Mr.Frank Scarpitti கலந்துகொள்ள உள்ளார்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக மார்க்கம் பிராந்திய நகரசபை உறுப்பினர் Ms.Nirmala Armstrong, 3 ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் Mr. Don Hamilton, மார்க்கம் பூப்பந்தாட்ட சங்க தலைவர் Mr.Philip Chow ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த சுற்றுப் போட்டியில் 150 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பெற உள்ளார்கள். இந் நிகழ்விற்கு அனைவரும் வருகை தந்து விளையாட்டு வீரர்களிற்கு உற்சாகத்தைக் கொடுக்குமாறு தமிழ் கனேடிய விளையாட்டு சங்கம் கேட்டுக் கொள்கின்றது.