வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடாவின் பல்கலைக்கழக மாணவர்கள் உதவித் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா (Photos)

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்றுப் பொருளாதார வசதியின்மையால் தமது பட்டப்படிப்பைத் தொடரமுடியாமல் அல்லலுறும் 19 மாணவர்களுக்கு (யாழ் பல்கலைக்கழகம் – 12 மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழகம் – 05 மாணவர்கள், கொழும்புப் பல்கலைக்கழகம் – 1 மாணவர், சப்ரகமுவப்பல்கலைக்கழகம் – 1 மாணவர்) மாதம் ஒன்றுக்கு மாணவர் ஒருவருக்கு தலா 3000.00 ரூபா வீதம் மாதாமாதம் 57,000.00 ரூபா நிதியுதவியை தற்பொழுது வழங்கி வருவதோடு இத்திட்டம் தொடங்கிய யூன் – 2011 இலிருந்து யூன் – 2016 வரை மொத்தம் 52, 310.00 டொலர்களை அனுப்பியுதவியிருக்கின்றோம்.

இத்திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா உதவி பெறும் மாணவர்களால் அண்மையில் வேலணையில் உள்ள எமது பாடசாலையில்கொண்டாடப்பட்டது.

காலத்தின் கட்டாயமான இச்சீரிய பணியினைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்குச் சங்கத்தின் அங்கத்தவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் புலம்பெயர் மண்ணின் வர்த்தகப் பெருமக்கள் அனைவரும் தமது முழுமையான ஆதரவையும் தம்மால் இயன்ற பங்களிப்பையும் நல்குமாறு சங்கத்தின் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதோடு இத்திட்டம் வெற்றியடைய உதவிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில்மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் பல்கலைக்கழக மாணவர் உதவித்திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டிப் பெருமகிழ்ச்சியுடன்தெரிவித்துக்கொள்கின்றோம்.

செழியன் (தலைவர்):416-949- 7795 மேகவர்ணன் (செயலாளர்):647-229- 4955 சிறீதரன் (பொருளாளர்):647-588-4301

பிற்குறிப்பு: சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் (யூலை 31, ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி முதல் மாலை 8:30 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது,

ussp1

ussp2

ussp3

ussp4

ussp5

ussp6

ussp8

velanai