கனடாவில் யாழ். வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 21 ஆவது ஆண்டு ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 21வது வருடாந்த ஒன்றுகூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (யூலை மாதம் 31ம் திகதி) கனடாவின் Scarborough Milliken Park இல் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் முன்னாள் அதிபர்கள் அமரர்கள் திரு. சு. சண்முகநாதன் திரு பொ. கேதாரநாதன் ஆகியோர் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்குச் சங்கத்தின் தலைவர் திரு.சி.இளஞ்செழியன் அவர்கள் தலைமை தாங்கினார்.

பெரும்பாலான பழைய மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. பிரதம விருந்தினராக வைத்தியக்கலாநிதி ப.ஞானேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. கு. பரமேஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கணக்காளர் மு. செல்வரட்ணம் அவர்களும் முன்னாள் ஸ்ரான்லிக் கல்லூரி அதிபர் திரு வி. மாணிக்கம் அவர்களும் திருமதி அ. சண்முகநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கல்லூரியின் பழைய மாணவிகள் திருமதிகள் கலா செல்வம் கவிதா காந்தன் தயா பொன்னம்பலம் ஆகியோரது கல்லூரிக்கீதத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் நிர்வாகசபை உறுப்பினர் திரு. க. பாஸ்கரன் அவர்கள் சங்கக் கொடியை ஏற்றினார். அடுத்து விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.

விளையாட்டு நிகழ்ச்சிகளை திருமதி சுலோ கந்தவேள் ஆசிரியர் திரு தனபாலசுந்தரன் திரு ஜெயச்செல்வன் திரு திருமதி விஜிதரன் ஆகியோர் மிகச்சிறப்பாக நெறிப்படுத்தினர்.

நாள் முழுவதும் பல வகை உணவுகள் வழங்கப்பட்டுக்கொண்டே இருந்தது. குறிப்பாக ஒடியற்கூழ், ஆட்டிறைச்சிக்கறி சுவையகம் தயாரித்து வழங்கிய தந்தூரிச்சிக்கன் என்பவற்றை அனைவரும் விரும்பி ரசித்துச் சுவைத்ததுடன் உணவுத் தயாரிப்பாளர்களைப் பாராட்டவும் தவறவில்லை.

அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட மாலை நேரப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தலைவர் தனதுரையில் சங்கம் 21 ஆண்டுகளாகச் செய்துவரும் அரும்பணிகள் குறிப்பாகக் கடந்த 6 ஆண்டுகள் செய்த ஆற்றல்மிகு சாதனைகள் எல்லாம் நினைவேட்டின் பதிவுகளாக நிலைபெற்றிருக்கின்றன என்றும் மாணவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உகந்த நலத்திட்டங்கள் நீண்டகாலச் சமூகப் பொருளாதார வழி சமைக்கும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் என்று அரிய செயற்பாடுகள் பழைய மாணவர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு வருவதனையுங் குறிப்பிட்டார்.

திரு மாணிக்கம் அவர்கள் தனதுரையில், கல்லூரியின் வரலாற்றையும் சங்கத்தின் செயற்பாடுகளையும் பற்றித் தனக்கேயுரியபாணியில் அழகாக எடுத்துரைத்தார்.

திரு செல்வரட்ணம் அவர்கள் தனது கல்லூரிக்காலப் பசுமையான நினைவுகளை நினைவுகூர்ந்ததோடு விளையாட்டரங்கிற்கு தனது கால ஆசிரியர்களின் பெயர்சூட்டியமை சாலச்சிறந்தது என்று நிர்வாகத்தினைப் பாராட்டினார்.

அடுத்து உரையாற்றிய திரு ஞானேந்திரன் அவர்கள் சமகால அரசியல் நிலைபற்றியும் எமது உரிமைகளைப் பெறும்வரை தமிழ் மக்கள் அனைவரும் சமயோசித சிந்தனையுடன் செயற்படவேண்டும் என்றும் கூறியதுடன் சங்கத்தின் செயற்பாடுகள் அனைவராலும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்றும் இந்தநிலை தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிறைவாக சங்கத்தின் செயலாளர் திரு. ச. மேகவர்ணன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த அனைவரும் பிரியா மனத்துடன் விடைபெற்றுச் சென்றார்கள்.

2f97fd9f-1b01-4d60-8fb0-56ff12b6a640

7ee860df-25a9-4177-adcf-ea5e1e626c8e

ea63f7cc-a2df-46a4-94be-808316d15583

0f8bbe9f-3147-4f1e-a789-c39467cd5fce

6e09b20a-f0c4-4870-9da6-e99ee67f06c5

5947e12b-9778-4e5a-b95d-7d35df432fb6

d7bea465-9974-4f13-b29f-7abbfde94ef6

48c09c38-ca92-4909-951d-e1572230fb98

14705bd6-b4b2-4cb8-903a-bfd8ec088662

a6c6eb7d-9aac-4500-a9bd-0f86b6a10c67

2c81b30c-a17e-4052-8698-b8731e1fdbff

34d7200d-1d2b-4513-bd90-52ebd35985f9

03772be3-b2f9-4842-836b-4910429516dc

40ade17d-3f2e-4015-861b-46d84815f6c1

80f03dad-cd2e-40c7-95d5-5e36050b40ce

c32edbe8-0e91-4dde-9088-2975f61e43c7

317ac851-3151-4fe6-abcb-4c0ea7b49e57

f669f1cd-7d17-45e6-bab4-8d1643d7eceb

f6363180-5e69-44ac-8833-c0acbff2aaa7