கனடிய தமிழர் தெருவிழாவில் பாதுகாப்பு பணியில் அசத்திய தமிழ் பொலிஸ் அதிகாரிகள் (Photos)

கனடிய தமிழர் தெரு விழாவிற்கு பாதுகாப்பிற்காக டொரோண்டோ தமிழ் பொலிஸார் வந்திருந்தமை புலம்பெயர் தேசத்தில் ஈழத் தமிழருக்கு கிடைத்த கெளரவமாகவே நோக்கப்படுகின்றது.

கனடாவில் நடக்கக் கூடிய தமிழர்களுடைய விழாக்களில் பெரிய விழாவாக இருக்கக்கூடிய தமிழர் தெருவிழா (TamilFest) முதல் நாள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

பலவகையான கலை நிகழ்வுகளுடன், சமுதாயத்தில் முக்கியம் வாய்ந்தவர்களின் சிறப்பு பேச்சுக்களும் இடம்பெற்றது.

சனிக்கிழமை, தவில், நாதஸ்வரம், வில்லுப்பாட்டு, பாரம்பரிய நடனம், துள்ளிசை நடனம், நவீன நடனம் என பலவகை நடனங்களும், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களும், ஆடை அலங்கார அணிவகுப்பு என பல்வேறு வீதிக் கொண்டாட்ட நிகழ்வுகளும், மேடை இசை நிகழ்ச்சிகள் நடை பெற இருக்கிறது.

police2

police