ஸ்காபரோ ரூஜ் றிவர் தேர்தல் விவாதத்தில் நீதன் சண் வெற்றி (Photos)

கனடா, ஸ்காபரோ – றோஜர்ஸ் தொலைக்காட்சி இன்றிரவு நடத்திய ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதியின் சகல வேட்பாளருக்குமான விவாதத்தில் என்டிபி வேட்பாளர் நீதன் சண் வெற்றி பெற்றார். ஸ்காபரோ தொகுதிக்கான போக்குவரத்து, நீர் மின் கட்டணம், சுகாதார சேவை ஆகியவற்றிற்காகப் போராடுவதற்கான தனது வலுவான திட்டங்களை நீதன் சண் முன்வைத்தார்.

“கத்லின் வின் தங்களது தேவைகளை நிறைவேற்றுவார் என்று ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதி மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்து களைத்துப் போய் விட்டார்கள்.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் ஸ்காபரோ வாழ் மக்களை அவர் அவமதித்து விட்டார். தொகுதி மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், நீர் மின் கட்டணத்தை குறைப்பதற்கும், வைத்தியசாலைகளை மேம்படுத்துவதற்கும், ஸ்காபரோ சுரங்க ரயில்பாதை உடனடியாக அமைக்கப்படுவதற்கும் நான் போராடுவேன்.” என்றார் நீதன் சண்.

ஸ்காபரோ மக்கள் கத்லின் அரசாங்கத்தால் கவனிப்பில்லாமல் விடப்பட்டார்கள் என்பதையும், நீர் மின் வாரியம் தனியாருக்கு விற்கப்பட்டதையும், வாக்குறுதிகள் மீறப்பட்டன என்பவற்றையும் மறுத்து கத்லின் வின்னுடைய வேட்பாளர் வாதிட்டார்.

கன்சவேட்டிவ் வேட்பாளர் ரேமன்ட் சோவினுடைய நீண்ட காலச் சேவைக்காக நீதன் சண் நன்றி தெரிவித்த அதே வேளை, விவாதம் முழுமையிலும் ரேமன்ட் சோ மௌனமாக இருந்ததையும் ஸ்காபரோவுக்காக வாதாடத் தவறியதையும் சுட்டிக் காட்டினார்.

“தங்களது நீர் மின் கட்டணங்கள் வானத்தின் உச்சிக்கு உயர்ந்து கொண்டு போகும் நிலையிலும்; மக்கள் அவசர நோயாளர் பிரிவில் நீண்ட நேரம் காத்துக்கிடக்கின்ற வேளையிலும் அவர்கள் நல்ல புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கின்ற நேரத்திலும் ஸ்காபரோவுக்காக வாதாட முடியாத இன்னுமொரு பின்வரிசை உறுப்பினர் கத்லின் அரசாங்கத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதி மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பயனற்றது.” என்று நீதன் சண் கூறினார்.

“ரேமன்ட்; சோ அவர்களது நீண்ட கால சேவைக்கும் அவரின் முயற்சிக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம். ஆனால் பணிகள் தாமதமின்றி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

ஸ்காபரோ தெகுதி மக்களுக்குரிய மதிப்பையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்குப் போராடக்கூடிய ஒருவர் இப்போது அவசியமாக இருக்கிறது.” என்று நீதன் சண் மேலும் குறிப்பிட்டார்.
நீதன் சண் தனது மனைவி தாட்ஷாவுடனும் இரண்டு ஆண் குழந்தைகளுடனும் ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதியில் வசித்து வருகின்றார்.

ஊடகத் தொடர்பு: ரெபேக்கா எல்மிங், 647 459 8313

neethan (2)

neethan (3)

neethan (4)

neethan (1)