9ஆம் ஆண்டு இதய அஞ்சலி 

அமரர் திருமதி நாகேந்திரம் ஜெபமலர் (சின்னமலர்)

தோற்றம்: 29.12.1952   -   மறைவு: 02.02.2009

 

அமரர் திருமதி நாகேந்திரம் ஜெபமலர் (சின்னமலர்) (அன்றூசன் ரெக்ஸ்ரைல்ஸ் – பண்டத்தரிப்பு ) தீபன் மருந்தகம் (அரச வைத்தியசாலை முன்பாக) புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரம் – திருமுகபுரம்- மந்துவில்)

 

மாதாவின் நல்லருளால் மலர் இலந்தன்னில் வாழ்ந்துவந்த ஜெப
மலர் எனும் சிரித்த முகம் கொண்ட குல விளக்கே
நாகேந்திரம் எனும் தீபன் மருந்தக உரிமையாளரின்
விவேகம் மிக்க ஆசை இல்லறத் துணைவியே
அன்ரன் ஜெயதீபன் என்ற அன்பாளன் உதைப்பந்தாட்ட வீரன்
அறிவாற்றல் திறன் நிறைந்த யாழ்.பல்கலைக்கழக பட்டதாரி – மேரி பஸ்ரியன் என
இரு ஆண்மக்களைப் பெற்று திருமுக ஆண்டவர் ஆலய அருகில் வாழ்ந்து வந்த
பெரு முயற்சி மிக்கவளே, “அமிர்தம் ” பாட்டியின் நேச மருமகளே
வேணி எனும் உறவு வழி கனடா நாட்டு பிரஜையை மூத்த மருமகளாய்
காணி நிலம் செழிப்பு மிக்க நெல்லியடி- கரவெட்டி பிரதேச செயலக பணியாளர்
சாளினி எனும் இளைய மருமகள் அற்புதங்கள் புரியும் செல்லப்பேரன் அன்றூசன்இவர்களுடன்
வாழ்நாளில் உண்டு, உறவாடி மகிழ நீ இங்கே இல்லை அம்மா
“தீபன் மருந்தக நிலையத்தில் ” நீ நின்றிருந்த வேலைதனில்
திடீரென எங்கிருந்தோ வந்த எறிகணை வீச்சில் உடன் பலியாகி – இன்று
ஒன்பது ஆண்டுகள் ஆகுதம்மா- என்றும் உன் நினைவலைகளில் இருந்து
ஓயாது உறங்காது உன் பசுமை நிறைந்த பண்பாட்டு பழக்க வழக்கங்கள்
மலர் இல்லம் இன்று ஜெயம் அருட்செல்வம் தம்பதியரின் அயராத பணியில்
உளம் நிறைந்து உயர்வாக நிற்கின்றது உன்னதமாக பூத்து நிறைந்தாலும் அதன் நறுமணம்
வீசி நற்பண்பை நாம் காண – ஜெப
மலரே நீ இல்லை என்ற குறை ஒன்றுதான் நம் அனைவருக்கும் அம்மா
விண்ணகத்தில் வாழும் இறை இயேசுவிடம் சென்றவளே – இம்
மண்ணுலகம் தன்னில் இனி யார் பிறப்பார் உன்னைப்போல

என்றும் உறங்காத உன் நினைவுகளுடன்

 

அன்பு மைத்துனன் வீ.என்.செல்வம்,
பண்புமிக்க சகோதரி செல்வராணி (யோகம் )
பாசமிக்க மக்கள் யசோதினி (வட்சாயினி )(மலர் மருந்தகம்-முல்லைத்தீவு ),
நேசம் மிக்க மகன் திலீபன் (மதன் ஊர்திகள் சுத்திகரிப்பு நிலையம்-திருகோணமலை )
ஆசை மகன் ஜெயதீபன்(சின்னத்தீபன் ) (கட்டட ஒப்பந்ததாரர்- வாகீசன் வீதி சுதந்திரபுரம் மத்தி, உடையார்கட்டு ),
அருமை மகன் மதன் (HNB அஷ்யூரன்ஸ் திருகோணமலை )

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு