மரண அறிவித்தல்

தம்பையா இராசரத்தினம்

  -   மறைவு: 05.09.2017

மாணிக்கப்பிள்ளையார் ஒழுங்கை, வீமகாமம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா இராசரத்தினம் நேற்று (05.09.2017) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முன்னாள் ஆயுள்வேத வைத்தியர் தம்பையா – அன்னப்பிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும் பாலாம்பிகையின் அன்புக்கணவரும் இராஜமோகன், இராஜ்குமார், ரஜனி (சுவிஸ்) காலஞ்சென்ற இராஜவிநோதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற கனகம்மா மற்றும் அன்னலட்சுமி காலஞ்சென்றவர்களான இராசம்மா, நடேசபிள்ளை, சங்கரப்பிள்ளை மற்றும் மங்கையற்கரசி, செல்லம்மா, சோமசுந்தரம் ஆகியோரின் சகோதரரும் மனோகரன், கஜனி, சிவமாலா ஆகியோரின் மாமனாரும் மதுரா, மயூரிக்கா, மிதுலன், மிரானி, ஜதுசன், கவிஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.09.2017) புதன்கிழமை பி.ப 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 06.09.2017
இடம் : மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0776873285
கைப்பேசி : 0777168138