இலங்கை அதிகாரி ஒருவருக்கு எயார்பஸ் நிறுவனம் இலஞ்சம்!!
ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறைவேற்று அதிகாரி ஒருவருக்கு எயார்பஸ் நிறுவனம் இலஞ்சம் வழங்கியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய அமைச்சர், சம்பவம் தொடர்பாக ஏர்பஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு வசூலிப்பதாக நம்புவதாகவும், இந்த விவகாரம் இங்கிலாந்தில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்












கருத்துக்களேதுமில்லை