வலப்பனை கல்வி வலய அதிபர் – ஆசிரியர்கள் போராட்டம்

(க.கிஷாந்தன்)

வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர், ஆசிரியர்கள் வலப்பனை நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வலப்பனை இலங்கை வங்கி கிளைக்கு முன்னாள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி இந்த அதிபர் – ஆசிரியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்து, தமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அதிபர், ஆசிரியர்கள் இன்று தொழிற்சங்க போரோட்டத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.