தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் 2ம் தேதி ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் முடிவு
13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்காகவும் தமிழ்தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 2ம் தேதி நவம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கூட்டுவதென்று முடிவு எட்டப்பட்டுள்ளது.
23-ஆம் தேதி அக்டோபர் மாதம் சனிக்கிழமை காலை பத்தரை மணியளவில் கட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் இணையவழியான கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா மற்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் சார்பிலே பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.












கருத்துக்களேதுமில்லை