தனது உரிமைகளை மீறும் செயல் என தவிசாளர் நிரோஷ் சாடியுள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான இன்று வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பயணிக்கும் வாகனம் எங்கு நிற்கின்றது என பிரதேச சபை உத்தியோகத்தர்களை பொலிஸ் புலனாய்வாளர்கள் தொலைபேசியில் விசாரித்துள்ளனர். இது மக்கள் பிரதிநிதியான தனது உரிமைகளை மீறும் செயல் என தவிசாளர் நிரோஷ் சாடியுள்ளார

 

 

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், நான் காலையில் சபையில் சென்று நினைவேந்தலை மேற்கொண்டு விட்டு மல்லாகம் நீதிமன்றில் எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு முன்னிலையாவதற்காக சென்றிருந்தேன். அவ்வாறு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் எமது சபை உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொண்ட பொலிஸ் புலனாய்வாளர்கள் எனது பயன்பாட்டில் உள்ள வாகனம் எங்கே நிற்கின்றது என வினவியுள்ளனர். இச்சம்பவம் அடிப்படையில், பிரதேச சபை ஒன்றிற்காக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டதும் சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் பிரதிநிதியான என் மீது நடைமுறைக்கு ஒவ்வாத கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதைக் காட்டுகின்றது. இந் நிலை தொடரக்கூடாது என எதிர்பார்க்கின்றேன்.

 

 

எவ்வகையான நோக்கத்தின் அடிப்படையில் எனது நடமாட்டம் குறித்து மேற்குறிப்பிட்ட அணுகுமுறை ஊடாக கண்காணிப்பதற்கான தேவை பொலிஸாரிற்கு எழுந்துள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஊடாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் கோரவுள்ளேன்.

 

 

கடந்த காலங்களில் நினைவேந்தல்களின் போது அநாகரீகமான முறையில் எல்லை தாண்டிய வகையில் புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் வடக்குக் கிழக்கில் காணப்பட்டுவருகின்றது. இம் முறை இறந்தவர்களை நினைவுகூர்வதற்கு தடையெதும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ள போதும் அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

 

தியாகராஜா நிரோஷ்

தவிசாளர்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.