காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரகளை சந்திப்பதற்கு ரணில் விருப்பம் – ஹரீன்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரகளை சந்திப்பதற்கு ரணில் விருப்பம் – ஹரீன்
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் வெளியிட்டுள்ளார் .
அமைச்சர் ஹரீன்பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு பிரதமர் விருப்பம் வெளியிட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்
கோட்டா கோ கோம் தொடரலாம் ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் அதன் மூலம் அவர்களையும் இணைத்து தீர்வை காணமுடியும் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் இரு ஆர்ப்பாட்டக்காரர்களை இணைத்துகொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப முயல்கின்றோம் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர் நாடாளுமன்ற குழுவில் இணைவதன் மூலம் அவர்கள் இறுதியில் புதிய கட்சியை உருவாக்கலாம் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
May be an image of 1 person and sitting

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்