வாழைச்சேனையில் பல நாட்களின் பின்னர் சமையல்எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்.

வாழைச்சேனையில் பல நாட்களின் பின்னர் சமையல்எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்
நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் மேலாக எரிவாயு வழங்கப்படாத நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோக நடவடிக்கை வாழைச்சேனை பொலிஸ் நிலையம் முன்பாக ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸின் முயற்சியினால் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
லிட்ரோ எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 450 சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் வாழைச்சேனை, பேத்தாழை, கல்குடா, ஓட்டமாவடி, மீராவோடை, கறுவாக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த தமிழ், முஸ்லிம் மக்;களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.
எரிவாயுக் கொள்வனவு செய்ய பொதுமக்கள் வருகை தந்த நிலையில் மக்கள் அதிகம் காணப்பட்டுள்ளதால் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தலைமையிலான பொலிஸாரின் பாதுகாப்புடன் எரிவாயு வினியோகம் இடம் பெற்றது.
ஒரு மாதங்களுக்கு மேலாக நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தற்போது நாட்டிலுள்ள களஞ்சியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில், எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக தகவல் பரவியதையடுத்து பொது மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு நேற்று சனிக்கிழமை இரவில் இருந்து குறித்த இடத்தில் காத்திருக்கும் நிலைமை காணப்படுகின்றது.
இந்த எரிவாயுக் கொள்வனவில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவாக வருகை தந்து சிலிண்டர்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.