இலங்கையின் நிலைமை ஏனைய உலக நாடுகளிலும் ஏற்படலாம் – சர்வதேச நாணயநிதியம்.

இலங்கையின் நிலைமை ஏனைய உலக நாடுகளிலும் ஏற்படலாம் – சர்வதேச நாணயநிதியம்
அரசாங்கங்கள் வறிய மக்களிற்கு உதவமுன்வராவிட்டால் இலங்கையின் நிலை உலகின் ஏனைய நாடுகளில் உருவாகலாம் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
உணவு எரிபொருட்களின் விலைகளை மானிய அளவில் சமூகத்தின் வறிய மக்களிற்கு அரசாங்கங்கள் வழங்கவேண்டும்,அரசாங்கங்களின் உரிய ஆதரவு இல்லாவிட்டால் இலங்கையின் நிலை ஏனையநாடுகளில் உருவாகலாம் என கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் வாழ்க்கை செலவு அதிகரிப்பால் மக்கள் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிற்கு அவசியமான உதவிகளை மிகவும் தெரிவுசெய்யப்பட்ட முறையில் வழங்கவேண்டும் மானியங்களை மக்களிற்கு நேரடியாக வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை செலவு தொடர்பில் இரண்டு முன்னுரிமைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஒன்று சமூகத்தின் வறிய மக்கள் – அவர்களே உணவு எரிபொருள் விலை அதிகரிப்பினால் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முன்னுரிமை உக்ரைன் யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட வர்த்தகங்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
May be an image of 1 person

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.