மர்மப் பொருள் வெடித்ததில் கிளாலியில் சிறுமி படுகாயம்!

மர்மப் பொருள் வெடித்ததில் கிளாலியில் சிறுமி படுகாயம்!
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமிக்கு 16 வயது என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்
May be an image of fire and outdoors

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்