மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை’ நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் இன்று போராட்டம்

மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை’ நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் இன்று போராட்டம்
நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து ,பொது மக்களின் வாழ்வாதாரம் கஷ்டத்துக்குள்ளான நிலையில் சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகளை நீக்க வலியுறுத்தியும் , மருத்துவப் பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தியும் இன்று(23) திங்கட்கிழமை காலை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதியர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,வைத்தியசாலை ஊழியர்கள் எனப் பலரும் இணைந்து வைத்தியசாலை முன்றிலில் அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப் போராட்டத்தில் சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம் , நோயுற்றவர்களை காப்பாற்றுங்கள் , சுகாதாரத்துக்கான பண ஒதுக்கீட்டில் கை வைக்காதே , குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் ,கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.