சிவப்பு சட்டை அணிபவர்கள் அனைவரும் ஜே.வி.பி உறுப்பினர்கள் அல்ல – சுனில் ஹந்துன்நெத்தி

சிவப்பு சட்டை அணிபவர்கள் அனைவரும் ஜே.வி.பி உறுப்பினர்கள் அல்ல – சுனில் ஹந்துன்நெத்தி
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெரும்பான்மையானவர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்கள் என்ற குற்றச்சாட்டை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் மறுத்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி அமைதியின்மையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சியின் பிரதிநிதிகள் இன்று பொலிஸ் மா அதிபரை சந்தித்துள்ளனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது பேச்வார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த குழுவில் பெரும்பான்மையானவர்கள் ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சில நபர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக அரசியல் சூழ்ச்சி வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும், அரசியல் பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான அறிக்கை தொடர்பில் தான் அவதானிப்பதாக பொலிஸ் மா அதிபர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சிவப்பு சட்டை அணிவதால் மாத்திரம் ஒரு தனிநபரை மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளராக மாற்ற முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இந்த அமைதியின்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் கரம் விளையாடுவதாக சமூக ஊடகங்கள் ஊடாக சமூகத்தில் ஒரு கருத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதிகளுடன் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் நேரடியாக பேசுமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
May be an image of 1 person

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.