100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும்
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை அறிவித்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
May be an image of tree and body of water\

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்