நுணாவில் பகுதியில் மினிவான் மோதி மோட்டார்சைக்கிளில் சென்றவர் காயம்.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை அண்மித்து நுணாவில் பகுதியில் ஏ9வீதியில் 23/05 திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொடிகாமம்-யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் மினிபஸ்-மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்