இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா…

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிர்மாலி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியவில்லை எனக் கூறி, அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளார்.

புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையை நியமிக்க அமைச்சர் உத்தேசித்துள்ள நிலையில், அபிவிருத்திகளை மீளாய்வு செய்வதற்கும், பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு வழிகாட்டுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

மே 21 மற்றும் 23 திகதிகளில் அமைச்சர் நிர்ணயித்த இரண்டு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன என தெரிவித்துள்ள அவர், குறிப்பாக இந்த இக்கட்டான நேரத்தில், நாட்டிற்கு மிக விரைவான வருவாயை ஈட்டித் தரும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு அவர் வெளிப்படுத்திய அணுகுமுறை நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்