நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

அந்த நிரப்பு நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கையிருப்புகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துவதற்கு மேலதிக ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பல்வேறு கலவர சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.