இராணுவத் தளபதி பதவியிலிருந்து சவேந்திர சில்வா இராஜிநாமா செய்வார் ?

 

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை ஒன்று நிறைவேற்றப்படுகிறது.

ஜூன் 01 முதல் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்கி பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய இராணுவ தலைமை அதிகாரியான விக்கும லியனகே புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

நாடு முழுவதும் மே 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து, தற்போதைய பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதியை பதவியிலிருந்து நீக்குமாறு பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்