எரிவாயுக் கப்பல் எரிபொருள் இன்மையால் இந்தியா திரும்பியது

 

 

லிட்ரோ எரிவாயுவை சந்தைக்கு வெளியிட இன்னும் சில நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

 

3500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் இலங்கைக்கு வந்தாலும், கப்பலுக்கு எரிபொருளை வழங்க முடியாததால் இந்தியாவுக்குச் சென்றுள்ளது.

 

கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குத் திரும்புவதற்கும் எரிவாயுவை இறக்குவதற்கும் இன்னும் மூன்று நாட்கள் தாமதமாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்