அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்

அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்
அதிக எண்ணிக்கையிலான மின்சார யூனிட்களை பயன்படுத்துவோருக்கு மின் கட்டண உயர்வுக்கான அமைச்சரவை முன்மொழிவை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு விரைவில் சமர்ப்பிக்கவுள்ளது. கம்பனிகள், கைத்தொழில் பேட்டைகள் , ஹோட்டல்கள் போன்ற அதிக மின்சார பாவனையாளர்களுக்கான கட்டணத் திருத்தத்தை இலங்கை மின்சார சபை கோரியுள்ளதாக என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒன்பது ஆண்டுகளாக மாறாமல் இருந்த கட்டணங்கள் குறைந்தபட்சம் சில மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் கட்டண அதிகரிப்பு தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது, ஆனால் அதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சர் கூறினார்.
கட்டண உயர்வு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களையும், குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துபவர்களையும் பாதிக்காது என்றும் அமைச்சர் கூறினார். “கட்டண உயர்நிலை பயனா ளர்களை கருத்திற் கொண்டு திருத்தப்படும்” என்று அமைச்சர் கூறினார். தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற அதிக மின்சாரத்தை பயன்படுத்துவோர் புதிய கட்டணத்தின் கீழ் தற்போதைய கட்டணத்தை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இவ்வாறான உயர்தர நுகர்வோர் சூரிய சக்தியை நாட வேண்டும், இது அவர்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமன்றி அரசின் மின் உற்பத்திச் சுமையைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
No photo description available.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.