சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டிகள்: விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டிகள்: விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை
முச்சக்கரவண்டிகளுக்கான பயணிகள் போக்குவரத்து சேவைகளை சீர்படுத்தும் பொருட்டு TAXI எனும் அடையாள பலகையைக் காட்சிப் படுத்தவும் , புதிய கட்டணங்களை அனைவரும் தெளிவாகக் காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்தவும் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முச்சக்கரவண்டி கட்டணத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை, ஆனால் கட்டணத்தை காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் தலையிட முடியும் சமீபத்திய எரிபொருள் விலையேற்றத்த யடுத்து முதல் கிலோமீற்றருக்கு ரூ.100 வும், இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ.80 உம் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க சங்கம் முடிவு செய்தது.”
எனினும் சில டாக்சி சேவை நிறுவனங்கள் தங்களது மொபைல் அப்ளிகேஷன் மூலம் முதல் கி.மீ.க்கு ரூ.120 ஆகவும், இரண்டாவதாக ரூ.100 ஆகவும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. சில முச்சக்கர வண்டி சாரதிகள் சரியான கட்டணத்தை வசூலிக்கிறார்கள். சிலர் தாம் விரும்பியபடி கட்டணத்தை வசூலிக்கிறார்கள் என்றார்.
மேலும், சூரிய சக்தியில் இயங்கும் மின்சார முச்சக்கர வண்டிகளை உள்நாட்டிலேயே தயாரித்து பயன்பாட்டுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தர்மசேகர கூறினார்.
முச்சக்கர வண்டிகளுக்கு இவ்வாறான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், அரசாங்கம் நாட்டிலிருந்து வெளியேறும் அந்நியச் செலாவணியை நிறுத்த முடியும் என்பதுடன், தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாகவும் அமைய முடியும் என்றார்.
நாட்டில் சுமார் 1.2 மில்லியன் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் உள்ளன, மேலும் குறைந்தது 850,000 முச்சக்கர வண்டிகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன.
எவ்வாறாயினும், முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பில் தேசிய கொள்கை எதுவும் இல்லை என்றும், அந்தச் சேவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் (NTC) பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
May be an image of outdoors

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்