எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு: மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு: மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
இலங்கை எரிபொருள் தட்டுப்பாட்டால் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி வருவதுடன், இதன் விளைவாக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.
விவசாயிகள் பலருக்கு பல வாரங்களாக டீசலைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் அதன் விளைவாக தமது உற்பத்திகளை பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பல மொத்த வியாபாரிகள், அன்றாடம் பொருளாதார மையங்களில் சும்மா இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்,
அதே நேரத்தில், நாட்டில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் , விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை உள்ளூர் சந்தைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வால் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மரக்கறிகளின் விலை அதிகமாக இருப்பதால், வழக்கமான கறிகளை உணவில் சேர்ப்பதில் சிரமம் இருப்பதாக சில நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பல மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் (ஒரு கிலோவுக்கு):
கோவா ரூ. 210-220
போஞ்சி – ரூ. 570-580
லீக்ஸ் ரூ. 175-180
கரட் – நுவரெலியா ரூ. 300-310
தக்காளி- ரூ. 490-500
முள்ளங்கி -ரூ. 150-180
நோகோல் – ரூ. 230-240
கெக்கரிக்காய் – ரூ. 70-80
வெள்ளரிக்காய் – ரூ. 90-100
உருளைக்கிழங்கு – நுவரெலியா ரூ. 250-260
பாகற்காய் – ரூ. 440-450
பூசணி – மலேசியன் ரூ. 100-110
கத்தரிக்காய் -ரூ. 240-250
முருங்கை – ரூ. 450-460
May be an image of food

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.