வாழ்க்கைச் செலவுக்கு எதிராக கண்டியில் போராட்டம்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக கண்டியில் இன்று (5) கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது.

அதன்படி இன்று காலை திகனயிலிருந்து கண்டி வரை மோட்டார் சைக்கிள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை மக்கள் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய், டீசல் மற்றும் பெட்ரோலுக்காக வரிசையில் நிற்கின்றனர்.

கண்டி திகனயில் உள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் நேற்று முதல் வரிசையில் நிற்கின்றனர்.

மண்ணெண்ணெய் அதிகபட்சமாக ரூ.1000 இற்கு உட்பட்டே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது அதேவேளை எரிவாயு சிலிண்டர்களை பெறுவதற்கும் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காண முடிகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை (8) வரை எரிவாயு சிலிண்டர்களுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என Litro Gas நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.