TRINCO_ ஐம்பது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வன்னி ஹோப் நிறுவனத்தினால் வழங்கி வைப்பு!!

ஐம்பது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வன்னி ஹோப் நிறுவனத்தினால் வழங்கி வைப்பு
ஹஸ்பர்_
வேலைக்கான உணவு எனும் திட்டத்தின் கீழ் வன்னி ஹோப் மற்றும் தமிழ் போரம் மலேசிய நிறுவனங்களின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றமும் ஈவிங் பெண்கள் வலயமைப்பும் இணைந்து ஐம்பது குடும்பங்களுக்கு ஐயாயிரம் பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் இன்று(26) தி/பாரதி தமிழ் வித்தியாலயத்தில் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலமையில் வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுக்காக கஸ்டப்பட்டும்  போதுமான உணவின்மை காரணமாக பாடசாலையை விட்டு இடைவிலகின்ற மாணவர்களின் அளவைக் குறைக்கும் நோக்குடனும்  பாரதி தமிழ் வித்தியாலயம், புதுக்குடியிருப்பு காந்தி முன்பள்ளி, வரோதயநகர் கிராம சேவகர் அலுவலகம் ஆகிய இடங்களில் சிரமதான நிகழ்வுகள் ஊடாக இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளரின் நிந்தனையில் உருவான ”சுற்றுக் சூழலை பாதுகாத்து  உணவுத் தேவையை நிறைவேற்றுவோம்” எனும் கருப்பொருளின் கீழ்  வேலைக்கான உணவு (புட் பேர் வேர்க்) எனும் விசேட வேலைத்திட்டத்தினூடாக இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.