3 எரிபொருள் கப்பல்களின் வருகை குறித்து ஐஓசியின் அறிவிப்பு

-சி.எல்.சிசில்-

 

 

 

பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய 3 கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் கூற்றுப்படி, ஜூலை 13 மற்றும் 15 க்கு இடையில் ஒரு கப்பல் இலங்கையை வந்தடைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 

மற்றுமொரு எரிபொருள் கப்பல் ஜூலை 29 – 31 ஆம் திகதிகளுக்கு இடையிலும் மூன்றாவது எரிபொருள் கப்பல் ஓகஸ்ட் 10 – 15 க்கு இடையிலும் நாட்டை வந்தடைவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்