சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றிய சுங்கத் திணைக்களம்

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றிய சுங்கத் திணைக்களம்

 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 47,211,075 ரூபா எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

இவை டுபாயிலிருந்து இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

விமான நிலையத்துக்கு வெளியே தங்கத்தை தனது பயணப் பொதிகளில் இருந்து அகற்றி, தள்ளுவண்டியில் மறைத்து கடத்த முயன்ற போதே சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

 

தலா 116 கிராம் எடையுள்ள 16 பிஸ்கட்டுகளுடன் மேலும் நான்கு தங்கத் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்