அரசியலமைப்பு முன்னிறுத்தும் ஜனநாயகம்-சமூக பாதுகாப்பு மதச்சார்பின்மை, மக்களாட்சித் தத்துவம் ஆகியவற்றை பாதுகாத்திட பாப்புலர் ஃப்ரண்ட்டின் சென்னை பெருநகர் சமூக பாதுகாப்பு மாநாட்டில் மக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் அழைப்பு!

அரசியலமைப்பு முன்னிறுத்தும் ஜனநாயகம்-சமூக பாதுகாப்பு மதச்சார்பின்மை, மக்களாட்சித் தத்துவம் ஆகியவற்றை பாதுகாத்திட பாப்புலர் ஃப்ரண்ட்டின் சென்னை பெருநகர் சமூக பாதுகாப்பு மாநாட்டில் மக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் அழைப்பு!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அதில் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசியதாவது,
 ஜனநாயகம், மக்களாட்சித் தத்துவம், அரசியலமைப்பு ஆகியவை நமது நாட்டின் அடிப்படையாகும். இவையெல்லாம் இன்று தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது. RSSன் தேசவிரோத சனாதனத்தை அரசின் கொள்கையாக பாஜக நடைமுறைப்படுத்தி வருகின்றது. கடந்த 8 வருடமாக ஆட்சியில் பாஜகவின் மதவெறி செயல்பாடுகளால் நம் நாட்டின் அனைத்து துறைகளும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, நேற்றைய தினம் வரை கேஸ் விலை உயர்வு போன்றவைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் சவாலானதாக மாறி வருகின்றது. தேர்தல் வாக்குறுதிகளை மறந்து பிரதமர் மோடி, மதவெறி அரசியலையும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும் வீரியமாக செயல்பட்டு வருகின்றார்.
 குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர் தாக்குதல் அதிகரித்திருக்கின்றது. பள்ளிவாசல்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் தொடர்ந்து தாக்கப்படுகின்றது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் கும்பல் படுகொலை செய்யப்படுகின்றனர். அரசியல் சாசனம் வழங்கிய மதச்சுதந்திரம் கேள்விக் குறியாகி வருகின்றது. ஹிஜாப், பாங்கு, தொழுகை, தலாக், ஹலால் போன்ற இஸ்லாமிய கலாச்சாரத்தையும், வழிபாட்டு முறையையும் பின்பற்ற முடியாத நிலையை சட்டத்தின் மூலமே உருவாக்கி வருகின்றனர்.
மறுபுறம் இனப்படுகொலைக்கான உறுதிமொழிகள் வெளிப்படையாக எடுக்கப்படுகின்றது. ராம்நவமி பெயரில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும், இனவெறி பேச்சுகளும் சுதந்திரமாக சங்கபரிவார கும்பல் செய்ததை பார்க்க முடிந்தது. இறைத்தூதர் மீது அவதூறுகளை அள்ளி வீசியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல், இதை கண்டித்து ஜனநாயக அடிப்படையில் போராடியவர்கள் மீது அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. தங்களின் உரிமைக்காக போராடிய மக்களின் மீது பொய் வழக்குகள் போடுவதும், அவர்களின் வீடுகளை சட்டத்திற்கு புறம்பாக புல்டோசரை கொண்டு தகர்ப்பதும் தொடர்கதையாக மாறிவிட்டது.
 மேலும், RSS பாசிசத்தின் அநியாயத்தை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற மக்கள் இயக்கங்கள் மீது அமலாக்கத்துறை ED, NIA, CBI போன்ற ஏஜென்சிகளை வைத்து தொடர் சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சமீபத்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் ஒவ்வொன்றும் கவலைஅளிப்பதாக அமைந்துள்ளது. CAA, கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, கியான்வாபி மஸ்ஜித், புல்டோசர் இடிப்பு மற்றும் குஜராத் வழக்குகள் என அனைத்திலும் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் கவலையளிக்கிறது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை முன்னாள் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் எப்போதும் நடக்காத நிகழ்வாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இது நாட்டின் ஆபத்தான போக்கினை வெளிப்படுத்துகிறது. அனைத்து மக்களின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மக்களாட்சியை விட்டு விட்டு மக்களை கூறு போடும் மதவெறி ஆட்சியை ஃபாசிச பாஜக அரசு செய்து வருகின்றது. எனவே, அரசியலமைப்பு முன்னிறுத்தும் ஜனநாயகம்-மதச்சார்பின்மை- சமூக பாதுகாப்பு போன்றவை வீழச்சியடைந்து வருவது கவலை யளிக்கின்றது. நமது ஜனநாயக அமைப்புகளை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.
மேலும், தமிழக அரசியல் களத்தையும் மதவெறியை நோக்கி நகர்த்தும் வகையில் பாஜக தலைவர்களின் மதவெறிப்பேச்சும், பேரணிகளும் அமைகின்றது. தமிழகத்தில் மதப்பதட்டத்தை அதிகரிக்க செய்யும் இந்துத்துவ வாதிகளின் செயல் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இவைகளை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கருத்தை பாஜகவினர் செய்து வருவது மாநிலத்தின் இறையாண்மைக்கு எதிரானது. பாஜக தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள, மத, சாதிய ரீதியிலான அரசியலை கொண்டு தமிழகத்தை பிரித்தாள்வதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது மாநில உரிமைகளில் தமிழகத்திற்காக குரல் எழுப்பாத பாஜக தமிழக தலைவர்கள். இதுபோன்ற பேச்சுக்களின் மூலம், மாநில சுயாட்சி உரிமையை பலவீனப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
 நமது நாட்டின் அரசியல் சாசன தத்துவங்களும் பாதுகாக்கப்பட்டு, ஜனநாயகம். மதசார்பற்ற கோட்பாடு பாதுகாக்கப்பட வேண்டும், இதற்கு அச்சுறுத்தலாக திகழும் RSS சங்பரிவார அமைப்புகளிடமிருந்து நாட்டை பாதுகாத்திட மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல் பட வேண்டும். இதனை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சங்கமிக்கும் “சமூக பாதுகாப்பு மாநாடு” ஜூலை 24- ம் தேதி சென்னையில் பச்சையப்பன் கல்லூரி எதிரில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. இதில் நாட்டின் மீது அக்கறையுள்ளவர்கள், ஜனநாயக சக்திகள், மக்கள் அமைப்புகள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மாநிலத் துணைத் தலைவர் காலித் முஹம்மது, செயலாளர் நாகூர் மீரான், செயற்குழு உறுப்பினர் ரபீக் ராஜா, மண்டல செயலாளர் அகமது முகைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.